வாடகைத் தாயாக நடிக்க.. அப்படியொரு காரியத்தை செய்த பிரபல நடிகை.. இப்போ ரொம்ப வருத்தப்படுறாரு!

மும்பை: நடிகை க்ரித்தி சனோன் வாடகை தாயாக தனது புதிய படத்தில் நடிக்க அப்படியொரு காரியத்தை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 2014ம் ஆண்டு வெளியான நெனோகடைன் படத்தின் மூலம் நாயகியாக சினிமா உலகுக்கு அறிமுகமானவர்.

தொடர்ந்து டோலிவுட்டில் நடித்து வந்த க்ரித்தி சனோனுக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

பாலிவுட்

பாலிவுட்

டைகர் ஷெராஃபின் ஹீரோபன்டி படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்த க்ரித்தி சனோனுக்கு தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்கள் அடுத்தடுத்து கிடைத்தன. தில்வாலே, ராப்டா, ஸ்த்ரீ, லுக்கா சுப்பி, கலங்க், அர்ஜுன் பாட்டியாலா, ஹவுஸ்ஃபுல் 4, பானிபட், பதி பத்னி அவுர் வோ, ஆங்கிரேஸி மீடியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

வாடகைத் தாய்

வாடகைத் தாய்

இயக்குநர் லக்‌ஷ்மன் உத்தேக்கர் இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாகி வரும் மிமி படத்தில் வாடகைத் தாய் கதாபாத்திரத்தில் இளம் நடிகை க்ரித்தி சனோன் கமீட் ஆகி நடித்து வருகிறார். பங்கஜ் திரிபாதி, சாய் தம்மன்கர் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

அப்படியொரு காரியம்

அப்படியொரு காரியம்

வெறும் வயிற்றில் பஞ்சை வைத்துக் கொண்டு வாடகைத் தாயாக நடிக்கக் கூடாது என்று ஆரம்பத்திலேயே கட்டளை போட்ட இயக்குநர் லக்‌ஷ்மன் உத்தேக்கர், கதாபாத்திரத்தின் வெயிட்டேஜை உணர்ந்து எடையை அதிகரிக்கும்படி பணித்துள்ளார். க்ரித்தி சனோனுக்கும் கதை பிடித்துப் போக, நடிக்க ஒரு நல்ல சான்ஸ் இருக்கு என சுமார் 15 கிலோ வரை தனது எடையைக் கூட்டியுள்ளார்.

அழுத்துப் போனது

அழுத்துப் போனது

உடல் எடையை அதிகரிக்க உடற்பயிற்சியை முற்றிலும் நிறுத்திய க்ரித்தி சனொன், தினமும் ஹல்வா, பூரி, சன்னா என வெளுத்துக் கட்டி தனது உடல் எடையை அதிகரித்துள்ளார். பசிக்காத நேரங்களிலும், வெறும் சீஸை வாயில் போட்டு சாப்பிட்டு வந்த அவருக்கு ஒரு கட்டத்தில் உணவே அழுத்துப் போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வருத்தம்

வருத்தம்

இவ்வளவு சிரமப்பட்டு நடித்த படம் கடைசியில் முடியும் தருவாய்க்கு முன்னதாக இந்த பாழான போன கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட லாக்டவுன் காரணத்தால், படப்பிடிப்பை முடிக்காமல் போனதால் ரொம்பவே அப்செட் ஆகியுள்ளார் க்ரித்தி சனோன். மேலும், தனது உடல் எடையை குறைப்பதா? வேண்டாமா? குறைக்க முடியுமா என்ற கவலையில் ஆழ்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே

ஏற்கனவே

படத்திற்காக ஒல்லியானாலும், மீண்டும் நார்மலுக்கு நடிகைகளால் வர முடியும். ஆனால், உடல் எடையை இஷ்டத்துக்கு அதிகரித்தால், மீண்டும் பழையபடி சைஸ் ஜீரோ உடற்கட்டுக்கு அவர்களால் வருவது என்பது மிகவும் சிரமமான விஷயம். இஞ்சி இடுப்பழகி படத்துக்காக ஹெவி வெயிட் போட்ட அனுஷ்கா ஏற்கனவே எந்தளவுக்கு கஷ்டப்பட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X