தியேட்டரில் டிக்கெட் விற்ற பிரபல நடிகை: வீடியோ இதோ
மும்பை: பாலிவுட் நடிகை க்ரிட்டி சனோன் தன் பட டிக்கெட்டுகளை தியேட்டரில் விற்றுள்ளார்.
லக்ஷ்மன் உதேகர் இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், க்ரிட்டி சனோன் நடித்த லுக்கா சுப்பி படம் கடந்த 1ம் தேதி ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் ரிலீஸான மூன்று நாட்களில் ரூ. 32. 13 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் க்ரிட்டி.
மும்பையில் உள்ள பி.வி.ஆர். தியேட்டருக்கு சென்ற க்ரிட்டி லுக்கா சுப்பி படம் பார்க்க வந்தவர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்துள்ளார். டிக்கெட் வாங்க கவுன்ட்டருக்கு சென்றவர்கள் அங்கு க்ரிட்டி சனோன் நின்றதை பார்த்து வியப்படைந்தனர்.
க்ரிட்டி டிக்கெட் விற்பனை செய்ததை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். படத்திற்கு இப்படியும் விளம்பரம் தேடியுள்ளார் க்ரிட்டி சனோன். தப்பில்ல தப்பில்ல.


Click it and Unblock the Notifications











