Kriti Shetty: கன்னக்குழி அழகால் ரசிகர்களை கிறங்கடித்த கீர்த்தி ஷெட்டி.. உருகிப்போன ஃபேன்ஸ்!

சென்னை: நடிகை கீர்த்தி ஷெட்டி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களில் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். கடந்த 2021ம் ஆண்டில் தெலுங்கில் உப்பென்னா படத்தில் நடித்து நடிகையாக என்ட்ரி கொடுத்திருந்தார் கீர்த்தி ஷெட்டி. இந்தப் படத்தில் அவரது அப்பாவாக விஜய் சேதுபதி வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார். ஷியாம் சிங்கா ராய் உள்ளிட்ட படங்கள் கீர்த்தி ஷெட்டி மிகப்பெரிய அளவில் கைக்கொடுத்தன. தமிழில் முன்னதாக சூர்யா ஜோடியாக நடிக்க கமிட்டான நிலையில், அந்தப் படத்தில் நடிக்க முடியாமல் போனது. தற்போது விக்னேஷ் சிவனின் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Kriti Shetty Instagram tamil cinema


நடிகை கீர்த்தி ஷெட்டி: மாடலிங்கிலிருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இந்தியில்தான் இவரது என்ட்ரி அமைந்தது. சூப்பர் 30 என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த கீர்த்தி ஷெட்டி தொடர்ந்து தெலுங்கில் உப்பென்னா என்ற படத்தில் நடித்து தென்னிந்திய சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கீர்த்தி ஷெட்டியின் அப்பாவாக நடித்திருந்தார். தமிழில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தையொட்டி உப்பென்னா படம் எடுக்கப்பட்டிருந்தது. படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது.

சூப்பர்ஹிட் படங்கள்: தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்தார். இந்தப் படங்களின் வெற்றி, அடுத்தடுத்த வாய்ப்புகளை கீர்த்திக்கு பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து லிங்குசாமி இயக்கத்தில் தி வாரியர் படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு மொழிகளில் இந்தப் படம் ஒரே நேரத்தில் வெளியானது. படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த போதிலும், படத்தின் கம் ஆன் பேபி என்ற பாடலில் கீர்த்தி ஷெட்டி போட்ட ஆட்டம் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் இம்ப்ரஸ் செய்தது. இதன்மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த கீர்த்திக்கு தமிழிலும் அடுத்தடுத்த வாய்ப்புகள் கதவை தட்டின.

அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் சூர்யா ஜோடியாக நடிக்க கமிட்டானார் கீர்த்தி. அந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்ட நிலையில், கீர்த்தியும் அதிலிருந்து விலகினார். தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கஸ்டடி படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. தற்போது தமிழில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பிரதீப் ரங்கநாதனுடன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும், ஜெயம் ரவியுடன் ஜெனீ படத்திலும் கார்த்தியுடன் வா வாத்தியாரே படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படங்கள் அடுத்தடுத்த ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

இன்ஸ்டாகிராமில் புதிய புகைப்படங்கள்: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். தற்போது நீலநிற கவுனில் க்யூட்டான போஸ்களில் புகைப்படங்களைவெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்களில் கன்னக்குழியை காட்டி ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். படங்கள் சில மணிநேரத்திலேயே லட்சக்கணக்கான ரசிகர்களை பார்க்க வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X