Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
டபுள் ஷிப்ட் பண்ணத் தயார்.. கிருத்தி ஷெட்டி எதுக்காக இப்படி சொல்லியிருக்காங்க தெரியுமா?
சென்னை : நடிகை கிருத்தி ஷெட்டி, தெலுங்கில் உப்பண்ணா படத்தின்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றவர்.
தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
தமிழிலும் குறுகிய காலத்தில் 3 படங்களில் கமிட்டாகியுள்ளார். இவரது தி வாரியர் படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது.
KGF,
புஷ்பா,
RRR
பத்தி
பேசுறப்ப,
ஏன்
அந்த
தமிழ்ப்
படத்த
பத்தி
பேசல..?
நடிகர்
கிஷோரின்
ஆதங்கம்

நடிகை கிருத்தி ஷெட்டி
நடிகை கிருத்தி ஷெட்டி, தென்னிந்திய மொழிகளில் என்ட்ரி ஆகியுள்ள இளம் புயல். குறுகிய காலத்திலேயே ரசிகர்களை தன்னுடைய நடிப்பு, அழகு, கவர்ச்சியால் கட்டிப் போட்டுள்ளார். தெலுங்கில் அறிமுகமான இவருக்கு விஜய் சேதுபதியின் மகளாக நடித்திருந்த உப்பெண்ணா படம் சிறப்பாக கைக்கொடுத்தது.

வணங்கான் படத்தில் கிருத்தி
இந்தப் படத்தின் கேரக்டர் இவருக்கு அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புக்களை பெற்றுத் தந்தது. தமிழில் எந்த ஹீரோவுடன் அறிமுகமாவார் என்ற எதிர்பர்ப்பு எழுந்த நிலையில், சூர்யா -பாலா காம்பினேஷனில் தற்போது வணங்கான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் தொடர்ந்து 35 நாட்கள் நடைபெற்றன.

கோவாவில் சூட்டிங்
இந்நிலையில் விரைவில் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் துவங்கவுள்ளது. இந்தப் படத்தின் மூலம் கிருத்தி ஷெட்டி தமிழில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்னதாக லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தனேனியுடன் அவர் இணைந்து நடித்துள்ள தி வாரியர் படம் சில தினங்களில் வெளியாகவுள்ளது.

வெங்கட் பிரபு கூட்டணியில் கிருத்தி
இந்தப் படத்தின் புல்லட் பாடல் வெளியாகி கிருத்திக்கு சிறப்பான பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் பாடலில் அவர் போடும் ஸ்டெப்ஸ் ரசிர்களை மிகவும் அதிகமாக கவர்ந்துள்ளது. இதனிடையே வெங்கட் பிரபு -நாக சைத்தன்யா கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் கிருத்தி ஷெட்டி கமிட்டாகியுள்ளார்.
பாலா குறித்து பாராட்டு
இந்நிலையில் தமிழ் பிலிமிபீட் நிகழ்ச்சிக்காக பேசிய கிருத்தி ஷெட்டி, இயக்குநர் பாலா குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். சூர்யாவின் 41வது படமான வணங்கான் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக தான் நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறப்பான புரிதல்
தனக்கும் பாலா சாருக்கும் இடையில் சிறப்பான புரிதல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து கிருத்தி ஷெட்டி பல தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். தான் சிறப்பாக விசில் அடிக்க தன்னுடைய மாமாதான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய உப்பெண்ணா படம் குறித்தும் அவர் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.

ரஜினி தங்கை -கமல் மகள்
இந்நிலையில் ரஜினியின் தங்கை -கமல்ஹாசனின் மகள் இதில் எந்த கேரக்டரை செலக்ட் செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதில் இரண்டு கேரக்டரையும் தான் மிஸ் செய்ய மாட்டேன் என்றும் டபுள் ஷிப்ட் செய்தாவது இரண்டு கேரக்டரையும் செய்து முடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.