எனக்கு தெரியாதது எதனா இருந்தா சொல்லுங்க... கீர்த்தி ஷெட்டியின் வேற லெவல் ட்வீட்

ஐதராபாத் : நடிகை கீர்த்தி ஷெட்டி பாலிவுட், டோலிவுட் என அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் ஷ்யாம் சிங்கா ராய் படம் வெளியானது.

இந்தப் படம் இவருக்கு டோலிவுட்டின் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை கொடுத்துள்ளது.

நடிகை கீர்த்தி ஷெட்டி

நடிகை கீர்த்தி ஷெட்டி

நடிகை கீர்த்தி ஷெட்டி பாலிவுட்டில் அறிமுகமாகி டோலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2019ல் வெளியான சூப்பர் 30 என்ற படத்தில் ஷ்ருத்திக் ரோஷன் ஜோடியாக இவர் தனது அறிமுகத்தை துவக்கினார். இந்தப் படம் இவருக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது.

5 தெலுங்கு படங்கள்

5 தெலுங்கு படங்கள்

அதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இவர் தெலுங்கில் 5 தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். ஆயினும் முன்னணி நடிகை அந்தஸ்தை இவர் பெற்றுள்ளார். கடந்த பொங்கலுக்கு வெளியான பங்கார்ராஜு படத்தில் இவர் நாகசைத்தன்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதிரடி பங்கார்ராஜு படம்

அதிரடி பங்கார்ராஜு படம்

இந்தப் படம் சிறப்பான மற்றும் அதிரடி வெற்றியை பெற்றுள்ளது. இதையடுத்து ஷ்யாம் சிங்கா ராய் படத்திலும் இவரது நடிப்பு பாராட்டிற்கு உள்ளாகியுள்ளது. இவர் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக இருந்தாலும் சிறப்பான கவனத்தை பெற்றுள்ளது.

தி வாரியர் படத்தின் நாயகி

தி வாரியர் படத்தின் நாயகி

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் இவரை நாயகியாக்க தமிழின் முன்னணி நடிகர்கள் மிகுந்த விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களிலும் கீர்த்தி ஷெட்டி மிகவும் பிசியாக காணப்படுகிறார். அவ்வப்போது போட்டோஷுட்கள் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் தனது க்யூட்டான புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தெரியாத விஷயத்தை சொல்லுங்க

தெரியாத விஷயத்தை சொல்லுங்க

மேலும் தனக்கு தெரியாத விஷயத்தை கூறுமாறும் அவர் கேப்ஷனில் தெரிவித்துள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது பதிலை ட்விட்டரில் கமெண்ட்டாக பதிவு செய்துள்ளனர். சீக்கிரமா தமிழுக்கு வாங்க கீர்த்தி ஷெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X