Don't Miss!
- Automobiles
காரா? இல்ல கப்பலா? டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் புதிய அவதாரத்தை கண்டு மிரளும் போட்டி நிறுவனங்கள்!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ரசிகர்களை வசப்படுத்தும் கீர்த்தி ஷெட்டி.. இவருக்கு யார்மேல க்ரஷ் தெரியுமா?
சென்னை : நடிகை கிருத்தி ஷெட்டி தென்னிந்திய மொழிகளின் நம்பிக்கை வரவாக காணப்படுகிறார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்.
தமிழிலும் அடுத்தடுத்து குறுகிய காலகட்டத்திலேயே 3 படங்களில் நடித்து வருகிறார்.
பொன்னியின்
செல்வன்..
த்ரிஷாவின்
குந்தவை
போஸ்டர்
ரிலீஸ்..
வந்தியத்தேவன்
சேட்டையை
ஆரம்பித்த
கார்த்தி!

நடிகை கிருத்தி ஷெட்டி
நடிகை கிருத்தி ஷெட்டி தெலுங்குப்படங்களில் அறிமுகமாகி குறுகிய காலகட்டத்திலேயே நானி உள்ளிட்டவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முடித்து விட்டார். தெலுங்கில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியான உப்பென்னா படத்தில் இவர் நடித்திருந்த கேரக்டர் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருந்தது.

அடுத்தடுத்த படங்கள்
இந்நிலையில் தமிழிலும் அடுத்தடுத்து முக்கியமான படங்களில் நடித்து வருகிறார். சூர்யா -பாலா கூட்டடணியில் சூர்யா 41 படத்திலும், வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யாவுடன் ஒரு படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே வரும் 14ம் தேதி லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தனேனியுடன் ஜோடி சேர்ந்து இவர் நடித்துள்ள படம் வெளியாக உள்ளது.

வரவேற்பை பெற்ற புல்லட் பாடல்
இதனிடையே இந்தப் படத்தின் புல்லட் பாடல் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. பாடலில் கிருத்தி ஷெட்டியின் நடன அசைவுகள் முக்கியமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படம் லிங்குசாமிக்கும் முக்கியமான படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் தமிழில் கிருத்திக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கிருத்தியின் க்ரஷ்
தற்போது 18 வயதேயான கிருத்தி ஷெட்டி, தன்னுடைய சிறப்பான படங்கள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். ஆனால் அவருடைய க்ரஷ் யார் தெரியுமா. டான், டாக்டர் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்துள்ள சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று தற்போது கிருத்தி ஷெட்டி விருப்பம் தெரிவித்துள்ளார்.

விரைவில் நிறைவேறும் ஆசை
இந்நிலையில் இவரது ஆசை விரைவில் நிறைவேறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மண்டேலா படத்தின் இயக்குநர் அஸ்வினுடன் சிவகார்த்திகேயன் இணையவுள்ள அடுத்தப்படத்தில் கிருத்தி ஷெட்டிதான் ஹீரோயின் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள மாவீரன் படத்திற்கு பிறகு இந்தப் படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

தமிழில் அறிமுகம்
கிருத்தி ஷெட்டி தெலுங்கில் குறுகிய காலத்திலேயே சிறப்பான நாயகியாக மாறினார். இதையடுத்து இவரை யார் தமிழில் அறிமுகப்படுத்துவார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே ஏற்பட்டது. சூர்யாவின் படத்தில்தான் இவர் முதலில் கமிட்டானார். ஆனால் லிங்குசாமியின் இருமொழிப்படம் தமிழில் வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படம் இவரது முதல் படமாக மாறியுள்ளது.