நடுராத்திரி 3 மணிக்கு சொகுசு கப்பலில் த்ரிஷா பார்த்த வேலை.. பல வருடம் கழித்து போட்டு உடைத்த பிரபலம்!

சென்னை: சோஷியல் மீடியாவை திறந்தாலே குந்தவை தேவி த்ரிஷாவின் தரிசனம் தான் ரசிகர்களை திகட்ட வைக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் ஏற்கனவே 3 படங்களில் நடித்து முடித்த நடிகை த்ரிஷா 4வது முறையாக தக் லைஃப் படத்திலும் தரமான சம்பவம் பண்ண காத்திருக்கிறார். த்ரிஷாவுக்கென ஏ.ஆர். ரஹ்மான் போட்ட சுகர் பேபி பாடல் வெளியாகி டிரெண்டாகி வரும் நிலையில், நடுராத்திரி 3 மணிக்கு த்ரிஷா சொகுசு கப்பலில் பார்த்த வேலையை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் பப்ளிக்குட்டி பண்ணி விட்டார்.

லியோ படத்தில் விஜய்யுடன் லிப் கிஸ் காட்சியில் நடித்து பகீர் கிளப்பிய த்ரிஷா தொடர்ந்து போல்டான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அஜித் குமாரின் விடாமுயற்சி படத்தில் அஜித்தே கணவராக இருக்க தனக்கு பிரகாஷ் என்பவருடன் உறவு உள்ளது, விவாகரத்து வேண்டும் என த்ரிஷா சொன்னதை கேட்டு பலரும் அவரை கெட்ட கெட்ட வார்த்தையில் தியேட்டரிலேயே திட்ட ஆரம்பித்து விட்டனர்.

KS Ravikumar reveals a cute and funny mid night galatta of Trisha

குட் பேட் அக்லி படத்திலும் அஜித் மீது வேண்டா வெறுப்பைக் காட்டும் மனைவி கதாபாத்திரத்திலேயே கடைசி வரை த்ரிஷா நடித்திருப்பார். இந்நிலையில், தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு பதிலாக கமல்ஹாசனுக்கு ரகசிய சிநேகிதியாக அவர் நடித்திருப்பதை பார்த்து பலரும் ஷாக் ஆகியுள்ள நிலையில், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் த்ரிஷா பற்றி இப்படியொரு சீக்ரெட்டை வெளிப்படுத்தி அவரையே நெளிய வைத்து விட்டார்.

சிரித்துக் கொண்டே சமாளிக்கும் த்ரிஷா: தொடர்ந்து தக் லைஃப் படக்குழுவுடன் புரமோஷனில் பங்கேற்று வரும் நடிகை த்ரிஷாவிடம் 'சுகர் பேபி' பாடல் குறித்தும் டிரைலரில் கமல்ஹாசன் "மேடம் ஐ ஆம் யுவர் ஒன்லி ஆடம்" என்கிற காட்சிகள் குறித்தும் ஏகப்பட்ட ஏடாகூட கேள்விகள் கேட்டாலும், தொடர்ந்து சிரித்துக் கொண்டே அழகாக டென்ஷன் ஆகாமல் பதிலளித்து வருகிறார் த்ரிஷா.

KS Ravikumar reveals a cute and funny mid night galatta of Trisha

நடுராத்தியில் த்ரிஷா பண்ண சேட்டை: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, மாதவன் உள்ளிட்டோர் மன்மதன் அம்பு படத்தில் நடித்திருந்தனர். அந்த படத்திற்காக சொகுசு கப்பலில் படம் பிடித்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் நடு இரவில் யாருமே இல்லாத நேரத்தில், மிட் நைட் ஒரு 3 மணி இருக்கும், த்ரிஷா மட்டும் கடலை பார்த்து "I am the Queen of the World" என கத்திக் கொண்டிருந்தார். அப்படியே கட் பண்ணா இப்போ பொன்னியின் செல்வன் படத்தில் மகாராணியாகவே வருகிறார் என கே.எஸ். ரவிக்குமார் பேசியதும், வெட்கத்தில் சிரித்துக் கொண்டே சமாளித்த த்ரிஷா, டைட்டானிக் படத்தில் லியோனார்டோ டிகாப்ரியோ கத்துவது போல க்ரூஸில் போகும் போது யாருமே இல்லையேன்னு அப்படி பண்ணிட்டேன் சார், மத்தபடி ஒண்ணுமில்லை என அழகாக பேச, நிஜமாவே நீங்கள் அதை சாதித்து விட்டீர்கள் என கே.எஸ். ரவிக்குமார் சொல்லிவிட்டார்.

எத்தனை வருஷம் ஹீரோயினாக: இன்னும் எத்தனை வருஷம் ஹீரோயினாக நடிப்பீங்க என்கிற கேள்வியையும் த்ரிஷாவை பார்த்து கே.எஸ். ரவிக்குமார் கேட்க, தெரியல சார், எத்தனை வருஷம் நடிக்க முடியுமோ நடிப்பேன் என்று பதில் அளித்தார். கமல்ஹாசன் உள்ளே புகுந்து எனக்கெல்லாம் ஃபேவரைட் ஹீரோயின் ஒளவையார் தான். எந்த வயதிலும் நடிகைகள் நடிக்கலாம் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X