நயன்தாராவை நடிக்க வைத்ததுதான் தவறு.. ரொம்பவே வருத்தப்பட்ட தனுஷ் பட இயக்குநர்

சென்னை: லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இதுவரை 75 படங்களில் நடித்திருக்கும் அவர் இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மேலும் மலையாள படம் ஒன்றிலும் கமிட்டாகியிருப்பதாக கூறப்படுகிறது. பல வருடங்களாக சினிமாவில் கோலோச்சியிருக்கும் அவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் அவர் குறித்து குபேரா படத்தின் இயக்குநர் சேகர் கம்முல்லா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.

நயன்தாராவின் பெயர் தமிழ் சினிமாவில் ஆழமாக பதிக்கப்பட்டுவிட்டது. ஐயா படத்தில் அறிமுகமான அவர் படிப்படியாக முன்னேறினார். ரஜினியுடன் ஜோடி சேர்ந்து சந்திரமுகி படத்தில் நயன் நடித்திருந்தாலும்; அந்தப் படத்தில் ஸ்கோர் செய்தது என்னவோ ஜோதிகாதான். இருந்தாலும் நயன்தாராவின் அழகு வெகுவாக கோலிவுட்டை ஈர்த்தது. முக்கியமான தேவையான இடங்களில் கவர்ச்சியை காண்பிக்கவும் அவர் தயங்கியதே இல்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் தொடர்ந்து அமைந்தன.

Nayanthara Kubera

கஜினி: அப்படி அமைந்த படம்தான் கஜினி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, அசின் லீடு ரோல்களில் நடித்திருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் என்பதை வைத்துக்கொண்டு முருகதாஸ் திரைக்கதை அமைத்திருந்தார். அந்தப் படத்தில் நயன்தாராவுக்கு இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரமே கிடைத்தது. இருந்தாலும் அதிலும் தனது திறமையை காண்பித்தார் நயன். ஒரு பாடலில் கவர்ச்சி நடனமும் ஆடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கேரவன் வசதி இல்லாததால் அந்தப் படத்துக்காக கார் டிக்கிக்கு பின் நின்று அவர் உடை மாற்றிய கதை எல்லாம் உண்டு.

அசுர வளர்ச்சி: இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரம் கிடைத்தால் தொடர்ந்து அதேபோன்றுதான் வரும் என்பதையெல்லாம் யோசிக்காமல் நடித்து முடித்த நயன்தாரா; அதற்கு அடுத்து தொடர்ந்து ஹீரோயினாக நடித்தார். அதன்படி விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். இதற்கு இடைப்பட்ட காலத்தில் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்து சினிமாவிலிருந்து விலகினார். பிறகு ரீ எண்ட்ரி கொடுத்து லேடி சூப்பர் ஸ்டாராக மாறியிருக்கிறார்.

காதல் டூ கல்யாணம்: மேலும் நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்து சில வருடங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டு வாடகை தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளையும் பெற்றிருக்கிறார். இப்போது ஒருபக்கம் குடும்பம், இன்னொருபக்கம் நடிப்பு என படுபிஸியாக சுற்றிக்கொண்டிருக்கிறார். மண்ணாங்கட்டி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் அடுத்ததாக மலையாள படத்தில் நடிக்கிறார். மேலும் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

சேகர் கம்முல்லா பேட்டி: இந்நிலையில் நயன்தாராவை வைத்து கஹானி படத்தை ரீமேக் செய்த இயக்குநர் சேகர் கம்முல்லா பேசுகையில், "கஹானி படத்தி ரீமேக்கான அனாமிகா படத்தை இயக்க வேண்டாம் என்றுதான் முதலில் நான் நினைத்தேன். ஆனால் பெண்களை மையமாக வைத்து படம் இயக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் அந்தப் படத்தை இயக்கினேன். அந்த சமயத்தில் நிர்பயா சம்பவம் முழு நாடையும் உலுக்கியிருந்தது. அந்த நேரத்தில் எனக்கு நல்ல கதை எதுவும் இல்லை.

நயனை நடிக்க வைத்தது தவறு: அதனால் பாலிவுட் படத்தை ரீமேக் செய்ய முடிவெடுத்தேன். அப்போது உச்சத்தில் இருந்த நயன்தாரா போன்ற நடிகை இப்படத்தில் நடித்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் அடி வாங்கியது. இன்னும் படத்தை உணர்வாக செய்திருக்கலாம். அந்தப் படத்தில் நயன்தாராவை நடிக்க வைத்தது தவறான தேர்வு என்பதை ஒத்துக்கொள்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X