‘ஊ சொல்றியா மாமா‘ பாடலுக்கு டஃப் கொடுத்து.. கவர்ச்சி ததும்ப ததும்ப ஆடிய குடும்பஸ்தன் பட நடிகை!
சென்னை: நடிகர் மணிகண்டன் நடித்த குடும்பஸ்தன் படம் ரசிகர்களின் மனம் கவர்ந்த திரைப்படமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் மணிகண்டனின் மனைவியாக நடித்திருந்தவர் தான் 'சான்வே மெக்ஹானா'. முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்ஸ் மனதில் இடம் பிடித்த இவர் தெலுங்கு பக்கம் சென்று கவர்ச்சி ததும்ப ததும்ப ஆட்டம் போட்டுள்ளார்.
1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ந் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் நடிகை சான்வே மேனகா. நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட சான்வே மெக்ஹானா, பிரேம விமானம், புஷ்பக விமானம் மற்றும் பிட்ட கதலு ஆகிய தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தை தொடர்ந்து, தமிழ் இவர் குடும்பஸ்தன் படத்தில் நடித்து தமிழில் அறிமுகமாகி இருக்கிறார்.

குடும்பஸ்தன் படம்: ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சாவ்னா மேகனா, குரு சோமசுந்தரம், ஆர்.சுந்தரராஜன், பிரசன்னா பாலசந்திரன், ஜென்ஸன் திவாகர் நடித்த இப்படம் கடந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியானது. குறைந்த வருமானமாக இருந்தாலும், கடன் தொல்லையின்றி குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த மணிகண்டனுக்கு திடீரென வேலை போய்விடுகிறது. வீட்டில் உண்மையை மறைத்து கடன் வாங்கி குடும்பத்தை கவனித்து வருகிறான். சுயமரியாதையை இழக்க கூடாது என்பதற்காக அலுவலகத்தில் நண்பனுக்காக சண்டை போட, வேலையில் இருந்து நீக்கப்படுகிறார். மாதம் 1ஆம் தேதி வர வேண்டிய சம்பளம் வராததால், அடுத்தடுத்த கடன் வாங்கி குடும்பத்தை சமாளிக்கிறார்.
எதார்த்தமான நடிப்பு: குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 8 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தில் ஆந்திர இறக்குமதியான சான்வே மெக்ஹானாவின் நடிப்பு அற்புதமாக இருந்தது. அந்த படத்தில் எதார்த்தமான ஒரு சாதாரண குடும்பத்து மனைவியாக நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து, நடிகை மேகனாவை தமிழ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவரின் இன்ஸ்டாகிராமை தேடி கண்டுபிடித்து, அவரின் போட்டோக்களுக்கு லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர். சுருட்டை முடி, வசீகரிக்கும் அழகு என தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த படி இருக்கும் நடிகை சான்வே மேகனா, குடும்பஸ்தன் படத்தில் கவர்ச்சி காட்டாமல் நடித்து இருக்கிறார். ஆனால், தெலுங்கில் இவர், 'Anaganaga Oka Raju' என்ற படத்தில் நடித்துள்ளார். அந்த படம் நாளை தியேட்டரில் வெளியாக உள்ளது. அந்த படத்தில் ஆந்திரா டூ தெலுங்கான என்ற பாலுக்கு குட்டி பாவடை போட்டுக்கொண்டு 'ஊ சொல்றியா மாமா' பாடல் சமந்தாவிற்கு டஃப் கொடுக்கும் வகையில் ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











