குடும்பத்தில் டார்ச்சர்.. காதலனுடன் சேர்த்து வைங்க.. காவல் நிலையத்தில் கும்பமேளா மோனாலிசா தஞ்சம்!

திருவனந்தபுரம்: கும்பமேளாவில் சமூக வலைத்தளங்களில் பிரபலமான இந்தூரைச் சேர்ந்த மோனி போஸ்லே என்கிற மோனலிசா, தனது காதலன் பர்மான் கானுடன் தம்பானூர் காவல் நிலையத்தில் அடைக்கலம் தேடியுள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் தொடங்கிய இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால், பாதுகாப்பு தேடி கேரளா வந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த மோனலிசாவுக்கும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த பர்மானுக்கும் காதல் மலர்ந்தது. மோனியின் குடும்பம் அவர்களின் உறவை ஏற்க மறுத்தது. தனது தந்தை ஜெய் சிங் போஸ்லே வேறு ஒரு திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும், பர்மானுடனேயே வாழ விரும்புவதாகவும் மோனி காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

Kumbh Mela Fame Monalisa Flees With Lover to Kerala Amid Family Opposition
Photo Credit:

காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்: பூவாரில் நடந்த திரைப்படப் படப்பிடிப்புக்காக வந்திருந்தபோது, மோனி காதலனுடன் காவல் நிலையம் வந்து புகாரளித்தார். புகாரைத் தொடர்ந்து, மோனியின் தந்தை ஜெய் சிங் போஸ்லே தம்பானூர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டார். மோனிக்கு 18 வயதாகிவிட்டதால், யாருடன் வாழ வேண்டும் என்பதைத் தீர்மானிக்க அவருக்கு சட்டபூர்வ உரிமை உள்ளது என காவல்துறை குடும்பத்தினருக்கு தெளிவுபடுத்தி சம்மதிக்க வைத்தது. பின்னர் அவர் காதலனுடன் சென்றார்.

ஹீரோயினான கும்பமேளா பொண்ணு: மகா கும்பமேளாவில் அழகான கண்களை கொண்டு பூ விற்கும் பெண்ணாக மோனலிசா சமூக வலைத்தளங்களில் வைரலானார். சனோஜ் மிஷ்ரா இயக்கும் 'தி டைரி ஆஃப் மணிப்பூர்' பாலிவுட் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மாடலிங் துறையிலும் தீவிரமாகச் செயல்படும் அவர், பாபி செம்மனூர் ஜூவல்லரியின் விளம்பரத் தூதராக கேரளாவுக்கு வந்ததும் செய்திகளில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

பரபரப்புக்கு பஞ்சமே இல்லை: கும்பமேளாவில் மாலைகளை கட்டி விற்றுக்கொண்டிருந்த மோனலிசாவை யூடியூபர்கள் வட்டமிட்டு அவரை பாப்புலராக மாற்றிவிட திடீரென அவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. வாய்ப்புக் கிடைத்த கொஞ்ச நாளிலேயே அவருக்கு முதல் பட வாய்ப்பை வழங்கிய சனோஜ் மிஷ்ரா பாலியல் வழக்கில் கைதாகி பரபரப்பு கிளம்பியது. அதன் பின்னர், ஏற்கனவே பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய பாபி செம்மனூர் உடன் இவருக்கு ஏற்பட்ட நட்பும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், பெற்றோர்களே மோனலிசாவுக்கு எதிராக இருப்பது அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த மோனலிசாவுக்கு சீக்கிரமே திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X