Monalisa: கும்பமேளா மோனாலிசாவிடம் அத்துமீறிய இயக்குநர்.. குடும்பத்தினர் முன்பே நடந்த அசிங்கம்
சென்னை: 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் இணையவாசிகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து அதன் பின்னர் தற்போது நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் மோனாலிசா, கும்பமேளா மோனாலிசா என்றால் பலருக்கும் அடையாளம் தெரியும். இவரை முதன் முதலில் படத்தில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக பாலிவுட் இயக்குநர் சனோஜ் மிஸ்ரா தெரிவித்தது மட்டுமல்லாமல், மோனாலிசாவின் வீடு தேடிச் சென்று அவருக்கு அட்வான்ஸ் எல்லாம் கொடுத்தார்.
அதன் பின்னர் இருவரும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் அடுத்தடுத்து வெளியாகி வந்தது. இப்படி இருக்கையில் சனோஜ் மிஸ்ரா மீது துணை நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
தனது முதல் பட இயக்குநர் சிறைக்குச் சென்று விட்டார் என்பதால் மோனாலிசா திரை வாழ்க்கை என்ன ஆகும் என்ற கேள்வி பலருக்கும் இருந்தது. ஆனால் அவர் அதற்குள் மேலும் சில படங்களில் கமிட் ஆகியிருந்தார். அவர் நடித்த ஆல்பம் பாடல்கள் எல்லாம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அத்துமீறிய இயக்குநர்: இப்படி இருக்கையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் படப்பிடிப்புத் தளத்தில் தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் அத்துமீறல் குறித்து கண்ணீருடன் மிகவும் கோபமாக பேசி உள்ளார் அதாவது, " நான் முதன் முதலில் நடிக்க கமிட் ஆனது சனோஜ் மிஸ்ரா படத்தில் தான். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது, சனோஜ் மிஸ்ரா என்னிடத்தில் தவறாக நடந்து கொண்டார். அவர் எனது உடல் பாகங்களை தொட்டார். அப்போது எனது குடும்பத்தினர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருந்தனர். அவர்களின் கண் முன்னே அவர் அப்படி மோசமாக நடந்து கொண்டார்.
பாலியல் வன்கொடுமை: இது எல்லாம் எனக்கு பிடிக்கவில்லை, இப்படி ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டதற்கு, முதல் படம் என்றால் அப்படித்தான் இருக்கும் என்று சகஜமான பதிலைக் கொடுக்கிறார். முதல் படம் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? முதல் படம் என்றால் பாலியல் வன்கொடுமை செய்வீர்களா?" என்று கோபமாகவும் அழுது கொண்டும் பேசினார். இவர் இவ்வாறு பேசியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி, ரசிகர்கள் நெட்டிசன்கள் என பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











