Monalisa: சொந்த வசதி முக்கியமல்ல.. முதல் பட சம்பளத்தில் பெண்களுக்காக பள்ளி கட்டும் 'வைரல் மங்கை' மோனலிசா!

சென்னை: கடந்த 2024ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் இணையதள வாசிகள் மூலம் பிரபலமானவர் மோனாலிசா. அதன் பின்னர் இவர் சினிமாவில் நடிக்க கமிட் ஆனார். இவரை சினிமாவில் நடிக்க வைக்கிறேன், அறிமுகம் செய்கிறேன் என்று இவரைத் தேடிச் சென்ற இயக்குநர் பாலியல் வழக்கில் சிறைக்குச் செல்ல, மோனாலிசா சினிமாவில் நடிப்பாரா மாட்டாரா என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டது. ஆனால் அவர் படங்களில் கமிட் ஆனது மட்டும் இல்லாமல், தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் கமிட் ஆகி உள்ளார்.

இப்படி இருக்கையில் தி டைரி ஆஃப் மணிப்பூர் என்ற படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார். இந்த படம் இந்தி மொழியில் உருவாகிறது. இந்த படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய மோனாலிசா மிகவும் எமோஷனலாக பேசினார். அதாவது நான் திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த பின்னர் நான் மீண்டும் பிரயாக்ராஜ்க்குச் சென்றேன். அங்கு நான் கங்கா தேவிக்கு பூஜை செய்து நன்றி தெரிவித்தேன். கும்பமேளாவில் பாசிகள் விற்றுக் கொண்டு இருந்த சாதாரணப் பெண் நான். நான் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைப்பேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.

Kumbh Mela Monalisa she plans to use the remuneration from her first film to start a girls school

நல்ல எண்ணம்: இந்த புகழும் அங்கீகாரமும் எனக்கு ஏற்படுத்தி உள்ள எண்ணம் குறித்து கூற விரும்புகிறேன். அதாவது என்னுடைய இந்த புகழ் மற்றும் அங்கீகாரத்தைக் கொண்டு, எனது சமூகத்திற்கு திருப்பிச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதாவது, எனது சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் பெண்கள் கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளனர். மேலும் அங்கு பள்ளிகளும் பெரிய அளவில் இல்லை. எனவே நான் எனது சொந்த ஊரில் பள்ளி ஒன்றை பெண்கள் கல்விக்காக கட்டப் போகிறேன்.

முதல் பட சம்பளத்தில்: அதாவது, " எனது முதல் படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து, எனது ஊரில் பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளியைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன். உண்மையான மாற்றம் கல்வி மூலம் மட்டுமே நிகழும். எனது வருமானம் எனது சொந்த வசதிக்காக மட்டும் பயன்படாமல், அடுத்த தலைமுறைக்கு உதவ வேண்டும் என விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த எண்ணத்தை பாராட்டி வருகிறார்கள்.

பட வாய்ப்புகள்: மோனாலிசா தற்போது மிகவும் பிஸியான நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர் இரண்டு தெலுங்கு படங்கள், ஒரு மலையாளப் படம் மற்றும் ஒரு இந்தி படம் என அடுத்தடுத்து கமிட் ஆகி வருகிறார். படங்களில் கமிட் ஆனாலும் இவரது கதாபாத்திரம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X