»   »  குப்புன்னு தூக்கும் குஷ்பு ராசி

குப்புன்னு தூக்கும் குஷ்பு ராசி

Subscribe to Oneindia Tamil

குஷ்பு வீட்டு ராசி பற்றித்தான் கோலிவுட் இளம் நாயகிகள் மத்தியில் படுசுவாரஸ்யமான விவாதம் நடந்து வருகிறது.

குஷ்புவுக்கு என்ன ராசி என்று குழப்பமாக இருக்கிறதா? குஷ்புவின் வீடு குறித்துத்தான் இந்த பரபரப்பு விவாதம் நடிகைகள் மத்தியில் ஓடிக்கொண்டிருக்கிறது.

குஷ்புவுக்குச் சொந்தமான வீட்டில்தான் தற்போது ஜோதிகா குடியிருக்கிறார். முதல்பட நாயகனான சூர்யாவை விழுந்து விழுந்து காதலித்தார். விடாப்பிடியாக அவர்இருந்த வைராக்கியத்தைப் பார்த்து அசந்துபோன சிவக்குமார், சூர்யாவும்,ஜோதிகாவும் கல்யாணம செய்து கொள்ள ஒருவழியாகப் பச்சைக் கொடி காட்டிவிட்டார்.


இதோ நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது. அடுத்த மாதம் டும் டும் டும்.

எதற்கெடுத்தாலும் சென்டிமெண்ட் பார்க்கும் இடமாச்சே கோலிவுட். இப்போதுசூர்யா-ஜோ காதல் ஜெயிக்க காரணமே குஷ்புவின் வீடு தான் என்று கொளுத்திப்போட்டு விட்டார்கள்.

இதையடுத்து காதலில் இருக்கும் நாயகிகள் அந்த வீட்டைப் பிடிக்க போட்டியில்இறங்கியுள்ளனர்.


சூர்யா வீட்டில் ஜோதிகா குடியேறிய பின் நாம் அந்த வீட்டில் குடியேறினால் நம்மகாதலும் கைகூடி கரகாட்டம் ஆடி விடாதா என்ற நப்பாசை தான் இதற்குக் காரணம்.

எனவே இப்போதே குஷ்புவைப் பிடித்து ஜோவுக்குப் பிறகு எனக்கே அந்த வீட்டைவாடக்ைககு விடவேண்டும் என அப்ளிகேஷன் போட ஆரம்பித்துள்ளனராம். அதில்லீடிங்கில் இருப்பவர் ரீமா சென்னாம்.

கருஞ்சிறுத்தை விஷாலுடன் இணைத்துப் பேசப்படுகிறார் ரீம் என்பதுதெரியும்தானே.

ஆனால், குஷ்பு அக்கா இதுவரை உறுதியான பதில் ஏதும் தரவில்லையாம்.இருந்தாலும் ரீம் போடும் விம் சோப்பு, குஷ்புவைக் கரைத்தாலும் கரைத்து விடும்என்கிறார்கள்.


இதேபோல அட்வான்ஸுடன் காத்திருக்கும் இன்னொரு நடிகை கேரளத்து பாவனா.இவருக்கு சென்னை ஹோட்டல் வாசம் பிடிக்கலையாம். அதனால் வீடு பார்த்து பால்காய்ச்சலாம் என்று காத்திருக்கிறாராம். குஷ்பு வீடு படு ராசியான வீடு என்பதாலும்,பாதுகாப்பான வீடு என்பதாலும் அந்த வீட்டுக்கே போய் விடலாம் என ஆசையாகஉள்ளாராம்.

சினிமாக்காரங்களுக்கு ராசி பைத்தியம் எப்போ போகுமோ ஈஸ்வரா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil