»   »  போஜ்புரிக்குப் போகும் குஷ்பு!

போஜ்புரிக்குப் போகும் குஷ்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவிலிருந்து ரிடையர்ட் ஆனவர்கள், ஆகிக் கொண்டிருப்பவர்களுக்கு அடைக்கலம் தரும் போஜ்புரிதிரையுலகம் இப்போது குஷ்புவுவையும் இரு கரம் கூட்டி வரவேற்றுள்ளது.

தமிழில் பீல்டு அவுட் ஆன நக்மா நேராக இந்திக்குப் போனார். அங்கு சரிப்படவில்லை. இதையடுத்து போஜ்புரிபடங்களில் நடிக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக ஏகப்பட்ட வாய்ப்புகள். இப்போது போஜ்புரியில் முன்னணிநாயகியாக நக்மா கலக்கி வருகிறார்.

நக்மாவைத் தொடர்ந்து ரம்பாவையும் போஜ்புரி திரையுலகம் வரவேற்றது. குறைந்த சம்பளம் என்றாலும் நிறையபடங்கள், நல்ல கவனிப்பு என்பதால் போஜ்புரி படங்களில் நடிக்க நடிகைகள் மத்தியில் நிறைய ஆர்வம்உள்ளது.

இப்போது ரம்பாவுக்கும் சொல்லிக் கொள்ளும்படி அங்கு படங்கள் உள்ளதாம். தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம் என எல்லா திரையுலகமும் கைவிட்டு விட்ட நிலையில் போஜ்புரியில் கிடைக்கும் வாய்ப்புகளைவாங்கிப் போட்டு திறமை காட்டி வருகிறார் ரம்பா.

இந்த நிலையில் சமீபத்தில் போஜ்புரி படத் தயாரிப்பாளர் ஒருவர் குஷ்புவை சந்தித்து தனது படம் ஒன்றில் நடிக்ககூப்பிட்டுள்ளார். நல்ல கதை, நீங்கள் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தியதால் சரிஎன்று சம்மதித்துள்ளாராம் குஷ்பு. மும்பையைச் சேர்ந்த குஷ்புவுக்கு உருது தான் தாய் மொழி. இந்தியும்அத்துப்படி. இதனால் போஜ்புரியில் தானே டப்பிங் பேசவும் தயாராக இருக்கிறாராம்.

விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாம். இந்தப் படத்தில் மட்டும்தான் இப்போதைக்குநடிப்பாராம். டிவி சீரியல், தமிழ்ப் படத் தயாரிப்பு என மறுபக்கம் பிசியாக இருப்பதால் தொடர்ந்து போஜ்புரியில்நடிக்கும் எண்ணம் குஷ்புவிடம் இல்லையாம்.

தமிழ் உள்ளிட்ட பிற தென்னிந்திய மொழிப் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் அல்லோகல்லப்படும்நடிகைகளுக்கு போஜ்புரி திரையுலகம் பச்சைக் கம்பளம் விரித்துக் காத்திருக்கிறது.

ரிடையர்ட் ஆன பிற நடிகைகளும் போஜ்புரி பக்கம் முயற்சித்துப் பார்க்கலாம்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil