»   »  சம்பளம் வாங்காத குஷ்பு

சம்பளம் வாங்காத குஷ்பு

Subscribe to Oneindia Tamil

கோக்கு மாக்கான சிக்கல்களில் மாட்டி, விழி பிதுங்கிக் கிடந்த குஷ்பு, வராது வந்தமாமணியாக கிடைத்த பெரியார் பட வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்டுள்ளார்.

தமிழக பெண்கள் கல்யாணத்திற்கு முன் அப்படி இப்படி இருப்பது சாதாரணம்தான்.அப்படிப்பட்ட நேரங்களில் உரிய பாதுகாப்பை பெண்கள் மேற்கொள்ளத் தவறக்கூடாது என்று கூறப் போய் சர்ச்சையில் சிக்கினார் குஷ்பு.

செருப்பு, துடைப்பத்துடன் குஷ்புவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம்நடந்தது. பாமகதான் இதில் முன்னணியில் இருந்தது. இந்தப் பிரச்சினையிலிருந்துவெளியே வர குஷ்பு ரொம்பவே அவதிப்பட்டு விட்டார்.

ஒரு வழியாக இந்தப் பிரச்சினையிலிருந்து மீண்ட குஷ்புவுக்கு சத்யராஜின்ரெக்கமண்டேஷனால் பெரியார் படத்தில் மணியம்மை வேடத்தில் நடிக்கும் வாய்ப்புவந்தது.

இந்த வேடத்தை தனது வாழ்க்கையில் விழுந்த கரும்புள்ளிகளை கழுவக் கிடைத்தவரமாகக் கருதிய குஷ்பு நிச்சயம் நடிப்பதாக ஒப்புக் கொண்டார்.

ஆனால் மறுபடியும் பஞ்சாயத்து கிளம்பியது. குஷ்பு, மணியம்மை வேடத்தில் நடிக்கக்கூடாது என பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. சட்டசபையிலும் இதைப்பிரச்சினையாக கிளப்பியது. குஷ்பு நடித்தால் போராட்டம் நடத்துவோம் எனவும்பாமக தரப்பு மிரட்டியது.

மேலும் படத்தின் கேமராமேனான தங்கர்பச்சான், குஷ்பு காட்சிகளை நான் படம்பிடிக்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார். இதனால் மீண்டும் சலசலப்புஏற்பட்டது.

ஆனாலும் மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு உறுதியாக இருந்தார். சத்யராஜும்அதே உறுதியைக் காட்டினார். சமீபத்தில் குஷ்பு சம்பந்தப்பட்ட காட்சிகளின் ஷூட்டிங்திருச்சியில் தொடங்கியது.

எல்லோரும் பயந்தது போல பாமகவினர் எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை.அமைதி காக்குமாறு முக்கிய இடத்திலிருந்து தனிப்பட்ட முறையில் கோரிக்கைவந்ததால், ஒன்றும் பண்ண வேண்டாம் என தொண்டர்களுக்கு பாமக தலைமைஉத்தரவு போட்டு விட்டதாம். இதனால் மணியம்மையைடிஸ்டர்ப் செய்யாமல் விட்டுவிட்டனர் பாமகவினர்.

இந்தக் கேரக்டர் அனது திரையுலக வாழ்க்கையில் மைல் கல்லாக அமையும் என்பதால்மிகவும் ஈடுபாட்டோடு நடித்து வருகிறாராம் குஷ்பு.

இப்படத்திற்காக தனக்கு சம்பளமே வேண்டாம் என்றும் கூறி விட்டாராம் குஷ்பு. அந்தஅளவுக்கு இந்த கேரக்டரை அவர் மதிக்கிறாராம்.

இந்த வேடத்தில் நீதான் நடிக்கிறாய் என்று சத்யராஜ் சொன்னது முதல் மணியம்மைகுறித்த விஷயங்களை சேகரித்து ஹோம் ஒர்க் செய்து வந்தாராம் குஷ்பு. ஷூட்டிங்ஸ்பாட்டில் மணியம்மையாகவே குஷ்பு மாறி விடுகிறார் என்று யூனிட்டில்உள்ளவர்களும் குஷ்புவின் ஈடுபாட்டை பாராட்டுகிறார்கள்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil