twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திமுகவில் சேர்ந்த பிறகு முதல்முறையாக கைதாகும் நடிகை குஷ்பு!

    By Shankar
    |

    kushboo
    சென்னை: திமுகவில் சேர்ந்த பிறகு முதல் முறையாக போராட்டத்தில் இறங்கி, கைதாகியுள்ளார் நடிகை குஷ்பு.

    கால் முறிவு காரணமாக ஓய்வெடுத்து வந்த குஷ்பு இந்த போராட்டத்துக்கு கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்தார்.

    ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமானவராக இருந்தவர் நடிகை குஷ்பு. ஜெயா டிவியின் ஜாக்பாட் ஷோவில் நிரந்தர தொகுப்பாளராக இருந்தார். அதிமுகவில் சேருவார் என்றெல்லாம் கூறப்பட்டு வந்த நிலையில், திடீரென திமுகவில் ஐக்கியமானார் குஷ்பு.

    கட்சியில் அவருக்கு தனி பதவி எதுவும் தரப்படாவிட்டாலும், தொடர்ந்து திமுக மேடைகளில் குஷ்புவுக்கு பிரதான இடம் தரப்படுகிறது. தேர்தல் பிரச்சாரம், திமுக கூட்டங்களில் குஷ்புவுக்கு தனி மரியாதைதான்.

    திமுக தேர்தலில் தோல்வியடைந்ததும், கட்சியில் எல்லோரையும் விட துணிச்சலாக கருத்து சொன்னவர் குஷ்புதான்.

    'இந்த தோல்வியைத் தந்ததற்காக மக்கள்தான் வருந்தப் போகிறார்கள். எங்களுக்கு ஒன்றுமில்லை,' என்று கூறினார்.

    இந்தநிலையில், இப்போது திமுகவினர் மீது அடுத்தடுத்து வழக்குகளைப் போட்டு, கைது செய்து வருகிறது ஜெயலலிதா அரசு. இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து திமுகவினர் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தை நடத்தினர். அதிமுக அரசு இந்த போராட்டத்துக்கு தடை விதித்த நிலையில், அந்த தடையை மீறி நடந்த போராட்டத்தில் முக ஸ்டாலின் உள்பட முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.

    வட சென்னையில் முக ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குஷ்பு, அதிமுக அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினார். பொய் வழக்கு போடும் ஜெயலலிதாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவிப்பதாகக் கூறினார்.

    பின்னர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுடன் அவரும் கைதானார். இதன் மூலம் திமுகவுக்காக முதல் முறையாக சிறை சென்றுள்ளார் குஷ்பு.

    இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கையில் ஊன்றுகோலுடன் வந்திருந்தார் குஷ்பு. அவரை பார்த்ததும் மகளிர் அணி நிர்வாகிகளும் தி.மு.க. தொண்டர்களும் ஆரவாரம் செய்து அவருடன் கை குலுக்கினர். சில தினங்களுக்கு முன் ஒரு மலையாளப் படப்பிடிப்பில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress and DMK activist Kushboo was arrested today after the party's protest in North Chennai against ADMK govt. Remember it is her first agitation and arrest for her party.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X