பிரபுவுடன் நடிக்கிறேனா? எனக்குத் தெரியாதே!! - குஷ்பு
சென்னை: பிரபுவுடன் மீண்டும் இணைந்து நடிப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் நடிகை குஷ்பு.
90களில் புகழ்பெற்ற ஜோடி பிரபு - குஷ்பு. தர்மத்தின் தலைவன், சின்னத் தம்பி, கிழக்குக் கரை, உத்தமராசா, மை டியர் மார்த்தாண்டன், வெற்றி விழா, சின்ன வாத்தியார் என ஏகப்பட்ட படங்களில் இணைந்து நடித்து, ஏக கிசுகிசுகளுக்கும் உள்ளானார்கள்.

திடீரென இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு எந்தப் படத்திலும் ஜோடியாக நடிக்கவில்லை. ஆனால் ஓரிரு மேடைகளில் ஒன்றாகத் தோன்றினார்கள்.
இப்போது புதுமுக இயக்குனர் ஒருவர் இருவரையும் தனது படத்தில் ஜோடியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக மீடியாவில் செய்தி வெளியானது.
ஆனால் குஷ்பு இதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'நான் தற்போது வெளிநாட்டில் இருக்கிறேன். யாரும் என்னை அணுகி இந்த மாதிரி கதை சொல்லவில்லை. எப்படி இதுபோன்ற செய்திகள் வெளியாகின்றன என்பதே புதிராக உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











