வீட்டில் நிறைய சண்டை வரும்.. ஆனால் அது மட்டும் நடக்காது.. மனம் திறந்து பேசிய குஷ்பூ

சென்னை: நடிகை குஷ்பூ 80களில் தமிழ் சினிமாவில் நுழைந்து கொடிக்கட்டி பறந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருந்தார். குஷ்பூவுக்கு கோயில் கட்டியது, குஷ்பூ இட்லி என்று ரசிகர்கள் கூறியது என தனி கிரேஸ் அவருக்கு இருந்தது. இப்போது அரசியலில் இருக்கும் அவர் யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியும் கொடுத்துவருகிறார். இந்தச் சூழலில் தனது மாமியார் குறித்து குஷ்பூ பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

மும்பையை பூர்வீகமாக கொண்டவர் குஷ்பூ. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் அறிமுகமான குஷ்பூ; ஹீரோயினாக தமிழில் அறிமுகமானார். தமிழ் தெரியாமல் ஹீரோயினாக அறிமுகமான அவர், நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழை முறைப்படி விரைவிலேயே கற்றுக்கொண்டார். அதன் காரணமாக அறிமுகமான சில படங்களிலேயே சொந்த குரலில் டப்பிங் பேசினார். அழகு, நடிப்பு, நடனம் என அத்தனையும் வாய்க்கப்பெற்ற அவர் இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.

Kushboo Sundar C Tamil Cinema

கோயில் கட்டிய ரசிகர்கள்: குஷ்பூ பீக்கில் இருந்த காலத்தில் ஒரே வருடத்தில் பத்து படங்கள் நடித்த வரலாறு எல்லாம் உண்டு. அந்த பத்து படங்களில் கிட்டத்தட்ட 8 படங்கள் வரை ஹிட்டடித்தன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் சரளமாக நடித்தார். மேலும் தனது மனதில் பட்டதை பட்டென்று பேசும் குணம் படைத்த சில குஷ்பூ; 20 வருடங்களுக்கு முன்னர் பேசிய கருத்து ஒன்று கடுமையான சர்ச்சைகளையும், எதிர்ப்பையும் சந்தித்தது. பிறகு அவர் அதற்கு வருத்தம் தெரிவித்தார்.

அரசியலில் குஷ்பூ: பெரிய திரையில் கலக்கிவந்த குஷ்பூ சின்னத்திரையில் சில நாடகங்களிலும் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியிருக்கிறார். தனது அரசியல் வாழ்க்கையை திமுகவில் ஆரம்பித்த அவர் அதன் பிறகு காங்கிரஸ் சென்றார். அங்கும் சில பிரச்னைகள் வெடிக்க இப்போது பாஜகவில் ஐக்கியமாகி தனது அரசியல் வாழ்க்கையை தொடர்ந்துவருகிறார்.

மீண்டும் நடிப்பில் குஷ்பூ: சில காலம் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்திருந்த அவர் இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவர் கடைசியாக ராமபானம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதில் கோபிசந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் விஜய்யுடன் வாரிசு படத்திலும் நடித்திருந்தார் குஷ்பூ. ஆனால் அவர் நடித்த காட்சிகள் சில காரணங்களால் படத்திலிருந்து தூக்கப்பட்டன.

குஷ்பூ பேட்டி: இந்நிலையில் குஷ்பூ தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "எனக்கும் சுந்தர்.சிக்கும் திருமணம் முடிந்த பிறகு அவரது அம்மா எங்களோடு இருக்கட்டும் என்று நான் சொன்னேன். ஆனால் அவரோ சண்டை அதிகம் வருமே என்று கேட்டார். நான் பரவாயில்லை என்று சொன்னேன். அவரது அம்மா என்ன செய்தாலும் நான் அனுசரித்துக்கொள்வேன் என்று அவரிடமே சொன்னேன். சண்டை அதிகம் வரும்தான். ஆனால் எப்போதும் எங்கள் குடும்பத்தை விட்டு பிரியமாட்டார் எனது மாமியார்.

தலைகீழாக போனாலும்: அதேபோல் எப்போதும் எங்களை விட்டுக்கொடுக்கவும் மாட்டார். உலகமே தலைகீழாக மாறினாலும் எவ்வளவு சண்டை போட்டாலும் எனது குடும்பத்தை எங்கும் விட்டுக்கொடுத்ததே இல்லை. என்னிடம் எனது கணவர் நான் இந்த வீட்டில் இருக்கக்கூடாதா என்று கேட்பார். நான் உடனே ஆமா நீங்கள் கோயம்புத்தூருக்கே சென்றுவிடுங்கள் என்று நான் சொல்வேன். அதேபோல் வேறு யாராவது வந்து எனது மாமியாரிடம், உனது மருமகள் என்ன இப்படி பேசுகிறார். அது நல்லது இல்லை என்று சொன்னால் போதும் உடனே அறைந்துவிடுவார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X