மனதில் குஷ்பூ.. கருணாநிதி ஜோசியரிடம் ஆடிய விளையாட்டு.. பாக்யராஜ் சொன்ன வாவ் சீக்ரெட்
சென்னை: குஷ்பூ கோலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். ரஜினி, கமல் என அனைவருடனும் நடித்துவிட்ட அவர் இயக்குநர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர் இப்போது அரசியலில் படுபிஸியாக இருக்கிறார். சினிமாவில் போன்றே அரசியலிலும் தனது தடத்தை ஆழமாக பதித்திருக்கிறார் குஷ்பூ.
மும்பையை பூர்வீகமாகக் கொண்ட குஷ்பூ தமிழில் தர்மத்தின் தலைவன் படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமாகியவர். அதன் பிறகு அவர் நடித்த வருஷம் 16, வெற்றிவிழா உள்ளிட்ட படங்களும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வரிசையாக வாய்ப்புகள் கொட்டி குவிந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை காண்பித்ததால் குறுகிய காலத்திலேயே கோலிவுட்டில் முன்னணி ஹீரோயினாக மாறினார்.
பல மொழிகளில்: தமிழில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அவர்; இங்கு மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். கோலிவுட்டில் குஷ்பூவுக்கு எப்படி ரெட் கார்ப்பெட் போட்டு வரவேற்றார்களோ அதேபோல் அவர் நடித்த மற்ற மொழி படங்களிலும் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் சுந்தர்.சி இயக்குநராக அறிமுகமான முறைமாமன் படத்தில் நடித்தார் குஷ்பூ.

காதல் டூ திருமணம்: முதல் படத்திலேயே சுந்தர்.சி மீது குஷ்பூவுக்கு நல்ல எண்ணம் ஏற்பட்டது. அந்த எண்ணம் நாளடைவில் காதலாக மாற; நீண்ட வருடங்கள் காதலித்தார்கள். ஒருகட்டத்தில் வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து இரண்டு பேரும் திருமணமும் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகள்கள். அதில் ஒருவர் சினிமா துறையில் விரைவில் அறிமுகமாகவிருப்பது கவனிக்கத்தக்கது.
அரசியலில் குஷ்பூ: இதற்கிடையே சினிமாவில் தனது பயணத்தை சிறப்பாக செய்த குஷ்பூ அரசியலிலும் அடியெடுத்து வைத்தார். முதலிலி திமுகவில் இணைந்த அவர்; சில காரணங்களால் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். அதிலும் சில காலம் இருந்துவிட்டு இப்போது பாஜகவில் ஐக்கியமாகியிருக்கிறார். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் ஒரு விழாவில் குஷ்பூ - கருணாநிதி பற்றி பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
பாக்யராஜ் பேசியது: அதாவது, "ஒருமுறை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி ஒரு ஜோசியரிடம், 'யோவ் என்ன நீ அடுத்தவன் மனதில் நினைப்பதை எல்லாம் சரியாக சொல்கிறாயாமே.. எங்கே நான் எனது மனதில் ஒரு பூவை நினைத்திருக்கிறேன். அது என்ன பூ என்று சொல்' என கேட்டாராம். அதற்கு அந்த ஜோசியரோ சிரித்துக்கொண்டே, 'நீங்கள் எந்த பூவை நினைத்திருந்தாலும் சொல்லிவிடலாம். மனதில் நடிகை குஷ்பூவை நீங்கள் நினைத்திருந்தால் எப்படி சொல்வது' என்று கேட்டுவிட்டாராம். இதை கேட்டு கலைஞர் கருணாநிதியும் அசந்துவிட்டாராம்.


Click it and Unblock the Notifications










