ஹேப்பி பர்த்டே புருஷன்.. கல்யாணம் ஆன புதுசுல்ல எடுத்த போட்டோவை ஷேர் செய்த குஷ்பு.. சுந்தர். சி சூப்பர்!

சென்னை: இந்நேரம் ரஜினிகாந்த் படத்தை மட்டும் தான் இயக்க மாட்டேன் என சொல்லாமல் இருந்திருந்தால் சுந்தர். சி பிறந்தநாளை ஒட்டுமொத்த தலைவர் ரசிகர்களும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடியிருப்பார்கள். ஆனால், கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தையே வேண்டாம் என விலகவும் ஒரு தில்லு வேண்டும். அந்த தில்லுக்கு சொந்தக்காரரான சுந்தர். சியின் பிறந்தநாளை அவரது மனைவி குஷ்பு சூப்பராக கொண்டாடி வருகிறார்.

1968ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி பிறந்த இயக்குநர் சுந்தர். சி இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரஜினிகாந்தை வைத்து அருணாச்சலம், கமல்ஹாசனை வைத்து அன்பே சிவம் என ஏகப்பட்ட டாப் நடிகர்களுடன் பணியாற்றிய சுந்தர். சி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 மற்றும் விஷாலை வைத்து ஒரு படம் என 2 படங்களை இயக்கி வருகிறார்.

Kushboo Sundar shares rare old photo of Sundar C and sends Birthday Wishes

அடுத்ததாக கார்த்தி நடிக்கும் படத்தையும் சுந்தர். சி இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரது படங்களில் காமெடியும், கிளாமரும் ரொம்பவே தூக்கலாக இருக்கும்.

ஹேப்பி பர்த்டே புருஷன்: 2000ம் ஆண்டு நடிகை குஷ்புவை சுந்தர். சி திருமணம் செய்துக் கொண்டார். ஹீரோக்களை விடுத்து இயக்குநர்களை ரோஜா, நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகள் திருமணம் செய்துள்ளனர். அந்த வரிசையில் டாப்பில் இருப்பதே குஷ்பு தான் என்று சொல்லலாம். தனது கணவர் பிறந்தநாளை முன்னிட்டு திருமணம் ஆன புதிதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு "ஹேப்பி பர்த்டே புருஷன்" என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் 2வுக்கு வெயிட்டிங்: சங்கராந்திக்கு வெளியான நயன்தாராவின் மன சங்கர வரபிரசாத் காரு திரைப்படம் 300 கோடி வசூலை கடந்து பிரபாஸின் தி ராஜாசாப் படத்தையே பாக்ஸ் ஆபீஸில் பின்னுக்குத் தள்ளியது. அடுத்து சுந்தர். சி இயக்கத்தில் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்துக்குத்தான் ரசிகர்கள் வெயிட்டிங். சுந்தர். சி பிறந்தநாளை முன்னிட்டு ஏதாவது அப்டேட் வருமா என்றும் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X