twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருச்சி நீதிமன்றத்தில் குஷ்பு ஆஜராகவில்லை பெண்களின் கற்பு குறித்துப் பேசியது தொடர்பான வழக்கில் வரும் 25ம் தேதி நடிகை குஷ்பு கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஷ்புவைத் தண்டிக்கக் கோரி தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் திருச்சி 2வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சித்ரா போட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.விசாரணைக்கு குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனைகுஷ்புவின் கணவர் சுந்தர்.சியிடம் திருச்சி போலீஸார் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.இந் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது குஷ்பு ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் அவரது வழக்கறிஞர்கள்சரவணன், விஸ்வநாதன் ஆகிய இருவரும் ஆஜராகி மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.அதில், குஷ்புவின் இரண்டாவது மகளுக்கு உடல் நலம் சரியில்லை. எனவே அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. தொடர்ந்துகுழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டிருந்தது.இந்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி உமா மகேஸ்வரி, இன்றைக்கு மட்டும் நேரில் ஆஜராவதிலிருந்து குஷ்புவுக்கு விலக்குஅளிக்கப்படுகிறது. வழக்கு வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று கண்டிப்பாக குஷ்பு ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டார். பாமக பிரமுகர் சாட்சியம்:இதற்கிடையே சென்னை நீதிமன்றத்தில் குஷ்புவுக்கு எதிராக பாமக மகளிரணி தலைவி தீபம் ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ளமனுவின் விசாரணை நடந்தது. அப்போது தீபம் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.குஷ்புவுக்கு எதிராக சென்னை எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில், சென்னை மாவட்ட பாமக மகளிரணி தலைவி தீபம்ஜெயக்குமார் வழக்குத் தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது. தீபம் ஜெயக்குமார் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், கடந்த24.9.2005 அன்று நாளிதழ் ஒன்றில் குஷ்பு அளித்த பேட்டியில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளாத தமிழ்ப்பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டிருந்தார்.இதுபற்றி பலரும் என்னிடம் கேட்டனர். அவர்களது கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை, வெட்கித் தலைகுணிந்தேன். எனவே குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.இதைத் தொடர்ந்து விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி கோவிந்தராஜுலு ஒத்திவைத்தார்.

    By Staff
    |

    பெண்களின் கற்பு குறித்துப் பேசியது தொடர்பான வழக்கில் வரும் 25ம் தேதி நடிகை குஷ்பு கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


    குஷ்புவைத் தண்டிக்கக் கோரி தமிழகம் முழுவதும் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் திருச்சி 2வதுகுற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சித்ரா போட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

    விசாரணைக்கு குஷ்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அந்த சம்மனைகுஷ்புவின் கணவர் சுந்தர்.சியிடம் திருச்சி போலீஸார் சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.

    இந் நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது குஷ்பு ஆஜராகவில்லை. அவருக்குப் பதில் அவரது வழக்கறிஞர்கள்சரவணன், விஸ்வநாதன் ஆகிய இருவரும் ஆஜராகி மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர்.

    அதில், குஷ்புவின் இரண்டாவது மகளுக்கு உடல் நலம் சரியில்லை. எனவே அவரால் இன்று ஆஜராக முடியவில்லை. தொடர்ந்துகுழந்தையைக் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளதால், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மனுவில்கூறப்பட்டிருந்தது.

    இந்த கோரிக்கையைப் பரிசீலித்த நீதிபதி உமா மகேஸ்வரி, இன்றைக்கு மட்டும் நேரில் ஆஜராவதிலிருந்து குஷ்புவுக்கு விலக்குஅளிக்கப்படுகிறது. வழக்கு வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அன்று கண்டிப்பாக குஷ்பு ஆஜராக வேண்டும் என்றுஉத்தரவிட்டார்.


    பாமக பிரமுகர் சாட்சியம்:

    இதற்கிடையே சென்னை நீதிமன்றத்தில் குஷ்புவுக்கு எதிராக பாமக மகளிரணி தலைவி தீபம் ஜெயக்குமார் தாக்கல் செய்துள்ளமனுவின் விசாரணை நடந்தது. அப்போது தீபம் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

    குஷ்புவுக்கு எதிராக சென்னை எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில், சென்னை மாவட்ட பாமக மகளிரணி தலைவி தீபம்ஜெயக்குமார் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது. தீபம் ஜெயக்குமார் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில், கடந்த24.9.2005 அன்று நாளிதழ் ஒன்றில் குஷ்பு அளித்த பேட்டியில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளாத தமிழ்ப்பெண்கள் எத்தனை பேர் உள்ளனர் என்று கேட்டிருந்தார்.

    இதுபற்றி பலரும் என்னிடம் கேட்டனர். அவர்களது கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியவில்லை, வெட்கித் தலைகுணிந்தேன். எனவே குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    இதைத் தொடர்ந்து விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதி கோவிந்தராஜுலு ஒத்திவைத்தார்.

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X