ரேவதி வர்மா மீது குஷ்பு காட்டம்! தன்னால்தான் ஜூன் ஆர் படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதாக அப்படத்தின் இயக்குனர் ரேவதி வர்மாகூறியுள்ளதற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெவித்துள்ளார்.கல்யாணத்திற்கு முன்பு எத்தனை இளம் பெண்கள் கற்போடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுங்கள் என்று பெரியமனுஷித்தனமாக பேசி தமிழக மக்களிடம் உதைபட்ட குஷ்பு, அந்த சர்ச்சையினால் படாதபாடு பட்டு விட்டார்.குஷ்புவின் பேச்சினால் அவர் நடித்த படங்களை ரிலீஸ் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சத்யராஜுடன் குஷ்பு நடித்தவெற்றிவேல் சக்திவேல், கேரளாவைச் சேர்ந்த ரேவதி வர்மா இயக்கத்தில் ஜோதிகா, சரிதாவுடன் இணைந்து நடித்த ஜூன் ஆர்ஆகிய படங்களை திரையிட விட மாட்டோம் என விடுதலைச் சிறுத்தைகளும், பாமகவினரும் கொக்கரித்து வந்தனர்.ஆனால் சத்யராஜ் படம் என்பதால் வெற்றிவெல் சக்திவேல் படத்திற்குப் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை. பேச வேண்டியஇடத்தில் பேசி படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள்.ஆனால் ஜூன் ஆர் வெளிவருமா, வராதா என்பதில் பெரும் குழப்பம் நிலவியது. தேவையில்லாததைப் பேசி நமக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டாரே குஷ்பு என்று விசனப்பட்ட இயக்குனர் ரேவதி வர்மா,ராமதாஸையும், திருமாவளவனையும் போய்ப் பார்த்து படத்தை வெளியிட உதவ வேண்டும் என்று காலில் விழாத குறையாககெஞ்சியுள்ளார்.அவரது நிலையைப் பார்த்த இருவரும், உங்களது படத்திற்கு நாங்கள் எதிரி அல்ல, குஷ்புதான் எங்களது மெயின் எதிரி, எனவேதைரியமாக படத்தை வெளியிடுங்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற கணக்கில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ரேவதி வர்மாவுக்கு இன்னொரு தலைவலிகாத்திருந்தது.குஷ்புவை வைத்து படம் எடுத்துள்ளதால், ரிலீஸ் செய்தால் பெரும் எதிர்ப்பு வரும், எனவே பெரிய விலை கொடுத்து படத்தைவாங்க நாங்கள் தயாராக இல்லை, நாங்கள் கேட்கும் விலைக்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம் என்று வினியோகஸ்தர்கள்முட்டுக்கட்டை போட்டனர். வெறுத்துப் போன ரேவதி வர்மா, அதெல்லாம் ஒரு பிரச்சினையும் வராது, ராமதாஸ், திருமாவளவன் அதற்கு உறுதிகொடுத்துள்ளனர், இந்தப் படத்தில்தான் எனது வாழ்க்கையே அடங்கியுள்ளது, எனவே தயவு செய்து அடிமாட்டு விலைக்குக்கேட்காதீர்கள் என்று கெஞ்சியுள்ளார்.ஆனால் தயவு தாட்சண்யம் பார்க்காத வினியோகஸ்தர்கள், நாங்கள் சொல்வதுதான் ரேட் என்று கறாராக கூறி விட்டனர்.வேறு வழி தெரியாத ரேவதி வர்மா அவர்கள் நிர்ணயித்த ரேட்டுக்கு படத்தை விற்றுள்ளார். இதனால் அவருக்கு பெருத்தநஷ்டமாம். இந்த சோகத்தில் அவர் குஷ்புவை கடுமையாக விமர்சித்துத் தள்ளி விட்டார்.ரேவதி வர்மா தன் மீது பாய்ந்திருப்பதால் குஷ்பு கடுப்பாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பாராட்டுவதுபோல பாராட்டி விட்டு என்னால்தான் படத்திற்குப் பிரச்சினை என்று ரேவதி வர்மா கூறியிருப்பது நியாயமல்ல. எதையாவது பேசி விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. அதை நான் விரும்பியதும் இல்லை. நான்சினிமாவுக்கு நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகி விட்டது. சுஹாசினி வந்து 25 வருடங்கள் ஆகி விட்டன. இருவரும் தமிழகமக்களிடம் நன்கு அறிமுகமானவர்கள்.எனவே விளம்பரம் தேடுவதற்காகவே நாங்கள் பேசினோம் என்று ரேவதி வர்மா கூறியிருப்பது சரியல்ல. என்னைப் பாராட்டிவிட்டு, கடுமையாக ரேவதி வர்மா விமர்சித்துள்ளது எனக்கு வேதனையைத் தருகிறது.இதற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார் குஷ்பு.இதுக்கு மேல் எதுவும் பேசாமல் இருப்பது தான் குஷ்புவுக்கும் நல்லது.

By Staff
தன்னால்தான் ஜூன் ஆர் படத்தை ரிலீஸ் செய்வதில் பிரச்சினை ஏற்பட்டதாக அப்படத்தின் இயக்குனர் ரேவதி வர்மாகூறியுள்ளதற்கு நடிகை குஷ்பு கண்டனம் தெவித்துள்ளார்.

கல்யாணத்திற்கு முன்பு எத்தனை இளம் பெண்கள் கற்போடு இருக்கிறார்கள் என்பதைக் காட்டுங்கள் என்று பெரியமனுஷித்தனமாக பேசி தமிழக மக்களிடம் உதைபட்ட குஷ்பு, அந்த சர்ச்சையினால் படாதபாடு பட்டு விட்டார்.

குஷ்புவின் பேச்சினால் அவர் நடித்த படங்களை ரிலீஸ் செய்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. சத்யராஜுடன் குஷ்பு நடித்தவெற்றிவேல் சக்திவேல், கேரளாவைச் சேர்ந்த ரேவதி வர்மா இயக்கத்தில் ஜோதிகா, சரிதாவுடன் இணைந்து நடித்த ஜூன் ஆர்ஆகிய படங்களை திரையிட விட மாட்டோம் என விடுதலைச் சிறுத்தைகளும், பாமகவினரும் கொக்கரித்து வந்தனர்.

ஆனால் சத்யராஜ் படம் என்பதால் வெற்றிவெல் சக்திவேல் படத்திற்குப் பெரிய அளவில் சிக்கல் ஏற்படவில்லை. பேச வேண்டியஇடத்தில் பேசி படத்தை ரிலீஸ் செய்துவிட்டார்கள்.

ஆனால் ஜூன் ஆர் வெளிவருமா, வராதா என்பதில் பெரும் குழப்பம் நிலவியது.

தேவையில்லாததைப் பேசி நமக்கு சிக்கலை ஏற்படுத்தி விட்டாரே குஷ்பு என்று விசனப்பட்ட இயக்குனர் ரேவதி வர்மா,ராமதாஸையும், திருமாவளவனையும் போய்ப் பார்த்து படத்தை வெளியிட உதவ வேண்டும் என்று காலில் விழாத குறையாககெஞ்சியுள்ளார்.

அவரது நிலையைப் பார்த்த இருவரும், உங்களது படத்திற்கு நாங்கள் எதிரி அல்ல, குஷ்புதான் எங்களது மெயின் எதிரி, எனவேதைரியமாக படத்தை வெளியிடுங்கள் என்று ஆறுதல் கூறி அனுப்பினார்.

தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற கணக்கில் நிம்மதிப் பெருமூச்சு விட்ட ரேவதி வர்மாவுக்கு இன்னொரு தலைவலிகாத்திருந்தது.

குஷ்புவை வைத்து படம் எடுத்துள்ளதால், ரிலீஸ் செய்தால் பெரும் எதிர்ப்பு வரும், எனவே பெரிய விலை கொடுத்து படத்தைவாங்க நாங்கள் தயாராக இல்லை, நாங்கள் கேட்கும் விலைக்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறோம் என்று வினியோகஸ்தர்கள்முட்டுக்கட்டை போட்டனர்.

வெறுத்துப் போன ரேவதி வர்மா, அதெல்லாம் ஒரு பிரச்சினையும் வராது, ராமதாஸ், திருமாவளவன் அதற்கு உறுதிகொடுத்துள்ளனர், இந்தப் படத்தில்தான் எனது வாழ்க்கையே அடங்கியுள்ளது, எனவே தயவு செய்து அடிமாட்டு விலைக்குக்கேட்காதீர்கள் என்று கெஞ்சியுள்ளார்.

ஆனால் தயவு தாட்சண்யம் பார்க்காத வினியோகஸ்தர்கள், நாங்கள் சொல்வதுதான் ரேட் என்று கறாராக கூறி விட்டனர்.

வேறு வழி தெரியாத ரேவதி வர்மா அவர்கள் நிர்ணயித்த ரேட்டுக்கு படத்தை விற்றுள்ளார். இதனால் அவருக்கு பெருத்தநஷ்டமாம். இந்த சோகத்தில் அவர் குஷ்புவை கடுமையாக விமர்சித்துத் தள்ளி விட்டார்.

ரேவதி வர்மா தன் மீது பாய்ந்திருப்பதால் குஷ்பு கடுப்பாகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைப் பாராட்டுவதுபோல பாராட்டி விட்டு என்னால்தான் படத்திற்குப் பிரச்சினை என்று ரேவதி வர்மா கூறியிருப்பது நியாயமல்ல.

எதையாவது பேசி விளம்பரம் தேட வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டதில்லை. அதை நான் விரும்பியதும் இல்லை. நான்சினிமாவுக்கு நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகி விட்டது. சுஹாசினி வந்து 25 வருடங்கள் ஆகி விட்டன. இருவரும் தமிழகமக்களிடம் நன்கு அறிமுகமானவர்கள்.

எனவே விளம்பரம் தேடுவதற்காகவே நாங்கள் பேசினோம் என்று ரேவதி வர்மா கூறியிருப்பது சரியல்ல. என்னைப் பாராட்டிவிட்டு, கடுமையாக ரேவதி வர்மா விமர்சித்துள்ளது எனக்கு வேதனையைத் தருகிறது.

இதற்கு மேல் வேறு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று கூறியுள்ளார் குஷ்பு.

இதுக்கு மேல் எதுவும் பேசாமல் இருப்பது தான் குஷ்புவுக்கும் நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X