»   »  ரூ.3 கோடி நஷ்டஈடு கேட்கும் குஷ்பு மேக்ஸிம் இதழில் தனது ஆபாசப் படத்தைப் பிரசுரித்ததற்கு நஷ்ட ஈடாக ரூ. 3 கோடி தர வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளார் நடிகை குஷ்பு. லண்டனைச் சேர்ந்த மேக்ஸிம் இதழ் தற்போது இந்தியாவிலிருந்து அச்சாகி வெளி வருகிறது. இதன் முதல் இதழில் நடிகை குஷ்புவின் நீச்சலுடைப் படம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் அது குஷ்பு அல்ல, அவரது முகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணின் உடலுடன் இணைத்து அந்த நீச்சலுடைப் படம் வெளியாகியிருந்தது. ஆபாசமான அந்தப் படத்தைப் பார்த்து குஷ்பு கொந்தளித்துப் போனார். மேக்ஸிம் பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் ரொம்ப வேகமாகவே நடவடிக்கை எடுத்தனர். இந் நிலையில் மேக்ஸிம் பத்திரிக்கையின் பதிப்பாளர், வெளியீட்டாளர், ஆசிரியர் உள்ளிட்ட 5 நிர்வாகிகளுக்கு, ரூ. 3 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்ப குஷ்பு முடிவு செய்துள்ளார். இன்று அல்லது நாளை இந்த நிாேட்டீஸ் அனுப்பப்படும் என குஷ்பு வட்டாரம் தெரிவிக்கிறது. குஷ்புவுக்கு பிடிவாரண்ட்?: இதற்கிடையே, சென்னை நட்சத்திர ஹோட்டலில், சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை மறைத்த குஷ்பு மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து வரும் 23ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. சிறுமி கொலை தொடர்பாக எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து குஷ்பு ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந் நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் குஷ்பு ஆஜராகவில்லை. இதையடுத்து குஷ்புவைக் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பாக வருகிற 23ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி வழக்கையும் அன்றைக்கு ஒத்திவைத்தார். 6 வழக்குகளுக்கு நிரந்தர தடை: இதற்கிடையே பெண்களின் கற்பு குறித்துப் பேசியதற்காக குஷ்பு மீது தொடரப்பட்ட 6 அவதூறு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது. குஷ்புவின் கற்பு பேச்சை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 21 வழக்குகள் போடப்பட்டன. அனைத்து வழக்குகளும் ஒரே பிரச்சினையின் அடிப்படையிலானவை என்பதால் குஷ்பு தொடர்பான 21 வழக்குகளையும் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த வழக்குகளுக்கு நிரந்தரத் தடை கோரி குஷ்பு தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 6 வழக்குகளுக்கு நிரந்தரத் தடை விதித்து நீதிபதி ஜெயபால் உத்தரவிட்டார். மற்ற வழக்குகளின் நிலை குறித்து பின்னர் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றார். தடை விதிக்கப்பட்டுள்ள 6 வழக்குகளும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டவையாகும்.

ரூ.3 கோடி நஷ்டஈடு கேட்கும் குஷ்பு மேக்ஸிம் இதழில் தனது ஆபாசப் படத்தைப் பிரசுரித்ததற்கு நஷ்ட ஈடாக ரூ. 3 கோடி தர வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளார் நடிகை குஷ்பு. லண்டனைச் சேர்ந்த மேக்ஸிம் இதழ் தற்போது இந்தியாவிலிருந்து அச்சாகி வெளி வருகிறது. இதன் முதல் இதழில் நடிகை குஷ்புவின் நீச்சலுடைப் படம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், உண்மையில் அது குஷ்பு அல்ல, அவரது முகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணின் உடலுடன் இணைத்து அந்த நீச்சலுடைப் படம் வெளியாகியிருந்தது. ஆபாசமான அந்தப் படத்தைப் பார்த்து குஷ்பு கொந்தளித்துப் போனார். மேக்ஸிம் பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் ரொம்ப வேகமாகவே நடவடிக்கை எடுத்தனர். இந் நிலையில் மேக்ஸிம் பத்திரிக்கையின் பதிப்பாளர், வெளியீட்டாளர், ஆசிரியர் உள்ளிட்ட 5 நிர்வாகிகளுக்கு, ரூ. 3 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்ப குஷ்பு முடிவு செய்துள்ளார். இன்று அல்லது நாளை இந்த நிாேட்டீஸ் அனுப்பப்படும் என குஷ்பு வட்டாரம் தெரிவிக்கிறது. குஷ்புவுக்கு பிடிவாரண்ட்?: இதற்கிடையே, சென்னை நட்சத்திர ஹோட்டலில், சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை மறைத்த குஷ்பு மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து வரும் 23ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. சிறுமி கொலை தொடர்பாக எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து குஷ்பு ஆஜராகாமல் இருந்து வருகிறார். இந் நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் குஷ்பு ஆஜராகவில்லை. இதையடுத்து குஷ்புவைக் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பாக வருகிற 23ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி வழக்கையும் அன்றைக்கு ஒத்திவைத்தார். 6 வழக்குகளுக்கு நிரந்தர தடை: இதற்கிடையே பெண்களின் கற்பு குறித்துப் பேசியதற்காக குஷ்பு மீது தொடரப்பட்ட 6 அவதூறு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது. குஷ்புவின் கற்பு பேச்சை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 21 வழக்குகள் போடப்பட்டன. அனைத்து வழக்குகளும் ஒரே பிரச்சினையின் அடிப்படையிலானவை என்பதால் குஷ்பு தொடர்பான 21 வழக்குகளையும் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டது நீதிமன்றம். இந்த வழக்குகளுக்கு நிரந்தரத் தடை கோரி குஷ்பு தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 6 வழக்குகளுக்கு நிரந்தரத் தடை விதித்து நீதிபதி ஜெயபால் உத்தரவிட்டார். மற்ற வழக்குகளின் நிலை குறித்து பின்னர் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றார். தடை விதிக்கப்பட்டுள்ள 6 வழக்குகளும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டவையாகும்.

Subscribe to Oneindia Tamil

மேக்ஸிம் இதழில் தனது ஆபாசப் படத்தைப் பிரசுரித்ததற்கு நஷ்ட ஈடாக ரூ. 3 கோடி தர வேண்டும் என்று கோரி நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளார் நடிகை குஷ்பு.

லண்டனைச் சேர்ந்த மேக்ஸிம் இதழ் தற்போது இந்தியாவிலிருந்து அச்சாகி வெளி வருகிறது. இதன் முதல் இதழில் நடிகை குஷ்புவின் நீச்சலுடைப் படம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.

ஆனால், உண்மையில் அது குஷ்பு அல்ல, அவரது முகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு வேறு ஒரு பெண்ணின் உடலுடன் இணைத்து அந்த நீச்சலுடைப் படம் வெளியாகியிருந்தது.

ஆபாசமான அந்தப் படத்தைப் பார்த்து குஷ்பு கொந்தளித்துப் போனார். மேக்ஸிம் பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸார் ரொம்ப வேகமாகவே நடவடிக்கை எடுத்தனர்.

இந் நிலையில் மேக்ஸிம் பத்திரிக்கையின் பதிப்பாளர், வெளியீட்டாளர், ஆசிரியர் உள்ளிட்ட 5 நிர்வாகிகளுக்கு, ரூ. 3 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்ப குஷ்பு முடிவு செய்துள்ளார்.

இன்று அல்லது நாளை இந்த நிாேட்டீஸ் அனுப்பப்படும் என குஷ்பு வட்டாரம் தெரிவிக்கிறது.

குஷ்புவுக்கு பிடிவாரண்ட்?:


இதற்கிடையே, சென்னை நட்சத்திர ஹோட்டலில், சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதை மறைத்த குஷ்பு மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து வரும் 23ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

சிறுமி கொலை தொடர்பாக எழும்பூர் 10வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து குஷ்பு ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இந் நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் குஷ்பு ஆஜராகவில்லை.

இதையடுத்து குஷ்புவைக் கைது செய்து ஆஜர்படுத்த காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இது தொடர்பாக வருகிற 23ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நீதிபதி வழக்கையும் அன்றைக்கு ஒத்திவைத்தார்.

6 வழக்குகளுக்கு நிரந்தர தடை:


இதற்கிடையே பெண்களின் கற்பு குறித்துப் பேசியதற்காக குஷ்பு மீது தொடரப்பட்ட 6 அவதூறு வழக்குகளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது.

குஷ்புவின் கற்பு பேச்சை எதிர்த்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் மொத்தம் 21 வழக்குகள் போடப்பட்டன. அனைத்து வழக்குகளும் ஒரே பிரச்சினையின் அடிப்படையிலானவை என்பதால் குஷ்பு தொடர்பான 21 வழக்குகளையும் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிட்டது நீதிமன்றம்.

இந்த வழக்குகளுக்கு நிரந்தரத் தடை கோரி குஷ்பு தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெயபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது 6 வழக்குகளுக்கு நிரந்தரத் தடை விதித்து நீதிபதி ஜெயபால் உத்தரவிட்டார். மற்ற வழக்குகளின் நிலை குறித்து பின்னர் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றார்.

தடை விதிக்கப்பட்டுள்ள 6 வழக்குகளும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டவையாகும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil