மீண்டும் ரியாலிட்டி ஷோவிற்கு திரும்பிய குஷ்பு... என்ன ஷோ, எந்த சேனல் தெரியுமா

சென்னை : கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் பிஸியாக இருந்த குஷ்பு, தமிழக தேர்தலில் பெற்ற தோல்விக்கு பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கி உள்ளார். ரஜினி நடித்து முடித்துள்ள அண்ணாத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் குஷ்பு, தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் நடித்து முடித்து, டப்பிங் வேலைகளையும் சமீபத்தில் முடித்துள்ளார்.

அண்ணாத்த படத்தை தொடர்ந்து கணவர் சுந்தர்.சி இயக்கும் அரண்மனை 3 படத்திலும் நடித்து வருகிறார் குஷ்பு. மேலும் சில படங்களில் முக்கிய ரோல்களில் நடிக்க குஷ்புவிடம் பேசப்பட்டு வருகிறது.

சின்னத்திரையில் ரீ என்ட்ரி

சின்னத்திரையில் ரீ என்ட்ரி

இதற்கிடையில் கோகுலத்தில் சீதை சீரியல் மூலம் சின்னத்திரையிலும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் குஷ்பு. இந்த சீரியலில் டாக்டர் மங்கலம் என்ற கேரக்டரில் தான் குஷ்பு நடிக்கிறார். ஆனால் இந்த கேரக்டர் சீரியல் முழுவதும் தொடராதாம். சிறப்பு தோற்றமாக தான் இந்த சீரியலில் குஷ்பு நடிக்கிறாராம். இருந்தாலும் குஷ்புவின் ரீ என்ட்ரியை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.

ஜாக்கெட் டிசைனுக்கு ரசிகர்கள்

ஜாக்கெட் டிசைனுக்கு ரசிகர்கள்

குஷ்பு இதற்கு முன் லட்சுமி ஸ்டோர்ஸ், மருமகள், குங்குமம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். ஜாக்பாட் உள்ளிட்ட டிவி ஷோக்களையும் தொகுத்து வழங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் குஷ்பு அணிந்து வரும் புடவை மற்றும் ஜாக்கெட் டிசைனை பார்ப்பதற்கே தனி கூட்டம் காத்திருக்கும். அந்த அளவிற்கு இவைகள் பிரபலம்.

ஸ்லிம்மாக மாறிய குஷ்பு

ஸ்லிம்மாக மாறிய குஷ்பு

இந்நிலையில் லேட்டஸ்டாக உடல்எடை ஆச்சரியப்படும் வகையில் குறைத்து, ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி உள்ளார் குஷ்பு. ஸ்லிம்மாக மாறிய ஃபோட்டோவை குஷ்பு ட்விட்டரில் பகிர்ந்தது முதல் அவரிடம் வெயிட் லாஸ் டிப்ஸ் கேட்டு வருகிறார்கள் சிலர். அவரின் தீவிர ரசிகர்களோ மீண்டும் ஹீரோயினாக நடிங்கள் என கூறி வருகின்றனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

திடீரென குஷ்பு உடல் எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி உள்ளதற்கு காரணம் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களுக்கா அல்லது புதிய படத்திற்காக இந்த தோற்ற மாற்றமா என நெட்டிசன்கள் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரியாலிட்டி ஷோவில் ரீ என்ட்ரி

ரியாலிட்டி ஷோவில் ரீ என்ட்ரி

இந்நிலையில் மீண்டும் ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் தீவிரமாக சின்னத்திரையில் ரீ என்ட்ரி கொடுக்கிறாராம் குஷ்பு. கலர்ஸ் தமிழ் சேனலில் டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 ரியாலிட்டி ஷோ மூலம் தான் அவர் ரீ என்ட்ரி கொடுக்கிறாராம். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக குஷ்பு பங்கேற்க உள்ளார். அவருடன் பிருந்தா மாஸ்டரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.

அசத்தல் ப்ரோமோ

அசத்தல் ப்ரோமோ

இந்த நிகழ்ச்சி தொடர்பான ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். விரைவில் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட உள்ளதாம்.

Recommended Video

V-CONNECT | ACTRESS KHUSHBOO CHAT PART-04 | AMITABH BACHCHAN தான் என்னோட CRUSH | FILMIBEAT TAMIL
மீண்டும் மெகா சீரியலில் குஷ்பு

மீண்டும் மெகா சீரியலில் குஷ்பு

இதைத் தொடர்ந்து விரைவில் தானே தயாரிக்கும் மெகா சீரியல் ஒன்றில் லீட் ரோலில் குஷ்பு நடிக்க போவதாக ஏற்கனவே கூறப்பட்டது. இதற்கான வேலைகளையும் குஷ்பு விரைவில் துவங்க போகிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X