நானாவது மாயமாகிறதாவது... அதெல்லாம் டூப்புங்க! - ரம்யா
பெங்களூர்: நான் காணாமல் போனதாக வந்த செய்திகள் வெறும் வதந்திகளே. நான் நியூயார்க் நகரில் உள்ளேன், என்று நடிகையும் முன்னாள் எம்பியுமான குத்து ரம்யா தெரிவித்துள்ளார்.
தமிழில் குத்து மூலம் அறிமுகமானதால் குத்து ரம்யாவாக அறியப்பட்ட திவ்யா, கிரி, வாரணம் ஆயிரம், பொல்லாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.

கன்னட பட உலகில் முன்னணி நடிகை. ரம்யா இரு வருடங்களுக்கு முன்பு காங்கிரசில் இணைந்தார். இடைதேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யாகவும் தேர்வானார். அதன் பிறகு நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இதனால் அரசியலில் வெறுப்பு ஏற்பட்டது அவருக்கு. கட்சிக்குள் தனக்கு எதிராக சதி நடப்பதாக குற்றம் சாட்டிவிட்டுக் காணாமல் போனார்.
தொடர்ந்து மாதக் கணக்கில் அவரைப் பற்றி எந்த செய்தியும் இல்லை. வீட்டுக்கு ரம்யாவை தேடிச் சென்ற பலர் அவர் இல்லாதது கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

பலமாதங்கள் அவரை காணாததால் மாயமாகி விட்டதாக செய்திகள் பரவின.
இப்போது ரம்யா திடீரென வெளிவந்துள்ளார். தன்னைப் பற்றி வெளியான செய்திகள் பொய்யானவை, வதந்திகள் என்றார்.
இது குறித்து ட்விட்டரில் அவர். "என்னைப்பற்றி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் மாயமாக வில்லை. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் இருக்கிறேன். விரைவில் இந்தியா திரும்புவேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications