சரத்துடன் நடிக்கவில்லை- ரம்யா

By Staff

சரத்குமார் ஹீரோவாக நடிக்க, ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் தயாரிக்கும் காக்கி படத்தில், சரத்துக்கு ஜோடியாக தான் நடிக்கவில்லை என்று குத்து ரம்யா @ திவ்யா மறுத்துள்ளார்.

Click here for more images
குத்து மூலம் தமிழுக்கு வந்த ரம்யா, அதன் பின்னர் தமிழில் சரியான வாய்ப்புகள் வராததால் தாயகமான கன்னடத்திற்குத் திரும்பினார். அங்கு ரம்யாதான் இப்போது லீடிங் லேடி ஸ்டார்.

தனது பெயரை சமீபத்தில்தான் திவ்யா என மாற்றிக் கொண்டார். குத்து ரம்யா, குத்து ரம்யா என்று தமிழ் சினிமாக்காரர்கள் அழைப்பது ஒரு மாதிரியாக இருக்கிறது என்பதால்தான் திவ்யா என பெயரை மாற்றினார். இருந்தாலும் இன்னும் எல்லோரும் குத்து ரம்யா என்று அன்போடு அழைத்து வருகிறார்களாம்.

இந்த நிலையில் சரத்குமார் நடிக்கும் காக்கி படத்தில் அவருக்கு ஜோடியாக ரம்யா நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது. இப்படம் சரத்குமாரின் கனவுப்படமாகும். ஐந்து மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது.

படத்தின் 40 சதவீத பகுதிகளை ஷூட் செய்து முடித்து விட்டார் இயக்குநர் வின்சென்ட் செல்வா. சரத்குமாருக்கு ஜோடியாக பூஜா நடித்திருந்தார்.

இந்த நிலையில் படத்தை மறுபடியும் தொடக்கத்திலிருந்து ரீஷூட் செய்ய தீர்மானித்த இயக்குநர் செல்வா, ஹீரோயினையும் மாற்றத் தீர்மானித்தார். இதையடுத்து குத்து ரம்யா ஹீரோயினாக நடிப்பார் என செய்திகள் வெளியாகின.

ஆனால் ரம்யா இதை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழில் நான் 3 படங்களில்தான் நடித்து வருகிறேன். தனுஷுடன் பொல்லாதவன், ஷாமுடன் தூண்டில் ஆகிய படங்களில் நடித்துள்ளேன். அடுத்து வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறேன். இதற்காக அமெரிக்கா செல்லவுள்ளேன். இப்படத்துக்காக 3 மாத கால்ஷீட் கொடுத்துள்ளேன்.

தமிழில் எனக்கு நிறையப் படங்கள் வருகின்றன. ஆனால் அனைத்தையும் வாங்கிப் போட்டுக் கொள்ள நான் அவசரப்படவில்லை. வாரணம் ஆயிரம் படத்தை முடித்து விட்டுத்தான் அடுத்த படம் குறித்து யோசிக்கவுள்ளேன்.

காக்கி படத்துக்காக யாரும் என்னை அணுகவில்லை. நவம்பர் மாதம் வாரணம் ஆயிரம் படத்துக்காக அமெரிக்கா செல்லவுள்ளேன் என்றார் ரம்யா.

ரம்யாவுக்கு கன்னடத்தில் 2 படங்கள் கையில் இருக்கிறதாம். முன்பை விட ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரம்யா.

More from Filmibeat

Read more about: ramya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X