லேடீஸ்.. லேடீஸ்.. நயன்தாரா, கியாரா, ருக்மணி, ஹூமா குரேஷின்னு யஷ்ஷுக்கு செம டஃப் கொடுக்கிறாங்களே!
சென்னை: கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதுவரை அந்த படத்தில் இருந்து யஷ் குறித்த காட்சிகள் மட்டுமே வெளியாகிறதே, அத்தனை டாப் நடிகைகள் நடித்தும் யாரையும் காட்டவில்லையே என்கிற கேள்விக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளியை வைக்கும் விதமாக தெறி புரமோவை கேவிஎன் நிறுவனம் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ளது.
விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் எப்படியும் விஜய் பிறந்தநாளுக்காவது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் வெளியாகவே வாய்ப்பில்லையா? என்கிற கேள்வி வெடித்துள்ளது. மேலும், ஜன நாயகன் படம் தொடர்பாக அனைவருக்கும் விஜய் செட்டில்மெண்ட் செய்துவிட்டார் போன்ற பேச்சுக்களும் சினிமா வட்டாரத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில், யஷ் தயாரித்து நடிக்கும் டாக்ஸிக் படத்தையும் கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அந்த படமும் தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டிருந்த சூழலில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் என்கிற அப்டேட் மற்றும் படத்தின் அட்டகாசமான புரமோஷன்களை படக்குழு ஆரம்பித்து இந்த ஆண்டின் அடுத்த மெகா பிளாக்பஸ்டரை வெளியிட காத்திருக்கின்றனர்.
நயன்தாரா முதல் ஹூமா குரேஷி வரை: கங்கா கதாபாத்திரத்தில் நடித்துள்ள நயன்தாராவுக்கு படத்தில் பட்டாசான ரோல் என்பது முதல் ஆளாகவே அவரை காட்டும் போதே தெரிகிறது. ஹீரோயினாக கியாரா அத்வானி கிளாமரில் கலக்க காத்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் ருக்மணி வசந்த் கைகளில் கன் விளையாட தாரா சுதாரியா மற்றும் ஹூமா குரேஷி வில்லத்தனத்தில் மிரட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாயில் துப்பாக்கி வைத்து: குழந்தைகளை பார்க்க அனுமதிக்க வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே எச்சரிக்கை போட்டுத்தான் A சான்றிதழ் பெற்ற இந்த டாக்ஸிக் படத்தின் காட்சிகளை வெளியிடுகின்றனர். கீது மோகன்தாஸ் என்ன ஹாலிவுட் டைரக்டர்களே மிரளும் அளவுக்கு இப்படி பெண்களை வைத்து யஷ்ஷுக்கு எதிராக படம் எடுத்துள்ளார் என்றும் கடைசியில் ஒரு பெண் அடியாளின் முட்டியில் சுட்டு அவரது வாயில் துப்பாக்கியை யஷ் வைக்கும் காட்சியெல்லாம் வெறித்தனம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications