21 Years Of Nayanism: தங்கமே உன்னத்தான்..! 21 ஆண்டு நயனிசம்.. லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா!

சென்னை: நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் ஒரு கலக்கு கலக்கி வரும் நடிகைகளில் ஒருவராக உள்ளார். அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவில் ஒருவர் அறிமுகமாகி, பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து, சினிமாவில் இருந்தே ஒதுங்கிவிடுவார் என பலரும் விமர்சித்து வந்த நிலையிலும் கூட, தொடர்ந்து சினிமாவில் உச்ச நடிகையாக வலம் வருகின்றார். இவர் சினிமா உலகில் காலடி எடுத்துவைத்து இன்று அதாவது டிசம்பர் 25உடன் 21 ஆண்டுகள் ஆகின்றது. நயனின் 21 ஆண்டுகால சினிமா வாழ்க்கை குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

நயன் முதன் முதலில் அறிமுகமானது, மலையாள சினிமாவில்தான். இவர், கடந்த 2003ஆம் ஆண்டு கிருஸ்துமஸ் தினத்தில் வெளியான மலையாளப் படமான, மனசினக்கரே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா. இந்தப் படத்தில் இருந்து தொடங்கிய நயனின் திரை வாழ்க்கை, இப்போதும் உச்சத்தில் உள்ளது.

nayanthara nayan

நயன் தமிழ் சினிமாவில், சரத்குமாரின் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்தார். நயனின் ஆரம்ப கால சினிமாவில் சிலர், அவர் மிகவும் குண்டாக உள்ளார், சரிவர நடனம் ஆட முடியவில்லை என விமர்சித்தனர். தன் மீது வைக்கப்பட்ட இதுபோன்ற விமர்சனங்களை நயன் உள்வாங்கிக் கொண்டு, தனது உடல் எடையைக் குறைத்துக் காட்டினார்.

nayanthara nayan

லேடி சூப்பர் ஸ்டார்: நயன் இன்றைக்கு லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகின்றார். திரை உலகில் அவர் காலடி எடுத்து வைத்தது தொடங்கி, இப்போது வரை அவர் ஏதேனும் சர்ச்சையில் சிக்கிக்கொண்டே உள்ளார். சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் தனது சினிமாவில், கதாபாத்திரத் தேர்வில் மிகவும் ஜாக்கிரதையாகவே இருந்தார். எல்லா படங்களுக்கும் ஓ.கே. சொல்லாமல், தனது கதாபாத்திரத்திற்கு படத்தில் நல்ல மதிப்பு இருக்கின்றதா எனப் பார்த்துவிட்டுத்தான், கதையை ஓ.கே. செய்கின்றார். இவரது நடிப்பில் இதுவரை 75 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் நயன் ஐந்து தலைமுறை நடிகர்களுடன் தான் நடித்துள்ளதாக பேட்டியில் தெரிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி, இப்போது வளர்ந்து வரும் நடிகரான கவின் வரை நயன் நடித்துள்ளார்.

nayanthara nayan

விக்னேஷ் சிவன்: பல காதல்களை எதிர்கொண்ட நயனுக்கு, விக்னேஷ் சிவனுடனான காதல் திருமணத்தில் கைகூடியது. ஆனால் சமீபத்தில் அளித்த பேட்டியில், விக்னேஷ் சிவனை திருமணம் செய்ததை நினைத்து நான் வருத்தப்படுகின்றேன். நான் அவரைத் திருமணம் செய்து கொண்டதால், அவரது தனித்தன்மை குறித்து யாரும் விவாதிப்பதில்லை. அவருக்குள் பல திறமைகள் இருக்கின்றது என வருத்தத்தோடு கூறினார். இந்தத் தம்பதியர்களுக்கு உயிர் உலக் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

nayanthara nayan

21 ஆண்டுகள்: அதேநேரத்தில் நடிகை நயன் நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் கவலையை அளித்தாலும், அவரது திருமணம் தொடர்பான டாக்குமெண்டரி ரிலீஸ் ஆகி அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியது. மேலும், தனது குழந்தைகளை வளர்ப்பதில் இருவரும் அதாவது நயன் - விக்கி தம்பதியர் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதால், படங்களில் நயன் கமிட் ஆகவில்லை. தற்போது அவரது குழந்தைகள் ஓரளவுக்கு வளர்ந்துவிட்டதால், சில படங்களுக்கு கதை கேட்டு ஓ.கே. செய்து வருகின்றார். சினிமா உலகில் அறிமுகமாகி 21 ஆண்டுகள் ஆவதைத் தொடர்ந்து, அவருக்கு அவரது ரசிகர்கள் உற்சாகமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எதிர்வரும் காலத்திலும் நயன் பல வெற்றிப் படங்களைக் கொடுக்க ஃபிலிமி பீட் சார்பாக வாழ்த்துகள்.

nayanthara nayan

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X