2024 மிஸ் ஆகிடுச்சு.. அடுத்த ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் 8 படங்கள் லைன் கட்டி நிக்குதே!
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை என்பது அவருடைய ரசிகர்களை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியது. ரசிகர்களை அப்செட் ஆக்கக் கூடாது என்பதற்காக நவம்பர் 18ம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸில் தனது ஆவணப்படத்தை ரிலீஸ் செய்தார் நயன்தாரா.
தனுஷ் உடனான சர்ச்சை காரணமாக அந்த ஆவணப்படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் போனாலும், நயன்தாரா ரசிகர்களுக்கு அது செம ட்ரீட் தான். ஆனால், வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டாரை பார்க்க முடியவில்லையே என ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு வரிசைக் கட்டி மாசத்துக்கு ஒரு படம் வெளியானாலும் 8 படங்கள் அடுக்கடுக்காக வெளியாகி உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்த காத்திருக்கின்றன.

இந்த ஆண்டு மிஸ் ஆனாலும், அடுத்த ஆண்டு அடித்து ஆட காத்திருக்கிறார் நயன்தாரா. நடிகை த்ரிஷா அஜித்துடன் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என 2 படங்களுடன் போட்டிப் போட காத்திருக்கும் நிலையில், 2025 இருவருக்கும் இடையே சபாஷ் சரியான போட்டியாக அமையும் என்றும் கூறுகின்றனர்.

குடும்பத்துடன் கொண்டாட்டம்: இந்த 2024ம் ஆண்டு நடிகை நயன்தாரா பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தாலும் ஒரு படமும் தியேட்டரில் வெளியாகவில்லை. அதிக நேரத்தை கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் தனது 2 மகன்களான உயிர் மற்றும் உலக் உடன் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்று கொண்டாடிய போட்டோக்களை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் பிரான்ஸ் நாட்டுக்கு டூர் சென்ற போட்டோக்களையும் நயன்தாரா ஷேர் செய்திருந்தார்.

8 படங்கள் கைவசம்: 2024ம் ஆண்டு அஜித், சிம்பு எப்படி ரசிகர்களை ஒரு படம் கூட கொடுக்காமல் ஏமாற்றினார்களோ அதே போல நயன்தாராவும் ஒரு படத்தையும் வெளியிடவில்லை. ஆனால், வரும் 2025ம் ஆண்டு வரிசைக் கட்டி 8 படங்களை வெளியிட காத்திருக்கிறார் நயன்தாரா. அந்த படங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம் வாங்க..

1. டெஸ்ட்
2. மண்ணாங்கட்டி
3. டியர் ஸ்டூடண்ட்ஸ்
4. டாக்ஸிக்
5. கிஸ்
6. ராக்காயி
7. மூக்குத்தி அம்மன்
8. மகேஷ் நாராயணன் இயக்கும் மலையாள படம்.

லீக்கான டாக்ஸிக் சீன்: நடிகர் யஷ் உடன் இணைந்து டாக்ஸிக் படத்தில் அவருக்கு அக்காவாக நயன்தாரா நடித்து வருவதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், பார் ஒன்றில் யஷ், ஹூமா குரேஷியுடன் நயன்தாரா வரும் காட்சி ஒன்று இணையத்தில் லீக்காகி தீயாக பரவி வருகிறது. அடுத்த ஆண்டு தமிழ், மலையாளம், கன்னடம் என கலக்க காத்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications











