Iraivan movie: இன்ஸ்டாகிராமை அலற விடும் நயன்தாரா! பதிவு செய்த 2வது போஸ்ட் என்ன தெரியுமா?
சென்னை: நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறைவன் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
வாமனன்,என்றென்றும் புன்னகை, மனிதன் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் இறைவன் படத்தை இயக்கி உள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

படத்தில் நயன்தாராவுடன், நரேன், விஜயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஜெயம்ரவி: வரலாற்றுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழிவர்மான கலக்கிய ஜெயம் ரவி அஹமத் இயக்கத்தில் இறைவன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
8 ஆண்டுகள்: தனி ஒருவன் படத்திற்கு பிறகு 8 ஆண்டுகள் கழித்து ஜெயம் ரவியும், நயன்தாராவும் மீண்டும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர். தனி ஒருவன் படத்திற்கு பிறகு மீண்டும் இந்தக்கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
A சான்றிதழ்: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 4 மொழிகளில் நாளை இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்திற்கு தணிக்கைக்குழு 'A' சான்றிதழ் கொடுத்துள்ளது. இதுகுறித்து விளக்கம் கொடுத்த ஜெயம் ரவி, படத்தில் ஒரு சில இடத்தில் கெட்டவார்த்தை இருப்பதால், படத்திற்கு சென்சார் போடு ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறது. இதனால், குழந்தைகளை அழைத்து வராதீர்கள் என்றார்.
நாளை இறைவன் படம் ரிலீஸ்: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அண்மையில் இன்ஸ்டாகிராமில் அடியெடுத்து வைத்து, தனது இரட்டைக் குழந்தைகளைக் கையில் ஏந்தியபடி என்ட்ரி கொடுத்திருந்தார். இன்ஸ்டாகிராமில் நயன்தாரா நுழைந்தவுடனே அவரை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து தற்போது 5.2 மில்லியன் ஃபாலோயர்களை வைத்து இருக்கிறார். இந்நிலையில், நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறைவன் படத்தின் போஸ்டரை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











