தனியாக மும்பையில் லேண்ட்டான நயன்தாரா… விக்னேஷ் சிவன் எங்கே போனார் ?

மும்பை : நடிகை நயன்தாரா மும்பை விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா தற்போது 6 படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமந்தா, விஜய்சேதுபதி, நயன்தாரா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இந்த மாதம் 28ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

அட்லி

அட்லி

இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக இருந்து ராஜா ராணி படம் வாயிலாக இயக்குநராக அறிமுகம் ஆனவர் அட்லி. உச்ச நடிகர்களுள் ஒருவரான விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கிய கோலிவுட்டில் தனிக் கவனத்தை ஈர்த்தார் அட்லி. இதனிடையே பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைக்க பிளான் செய்த அவர், தனது முதல் படமாக நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கத் திட்டமிட்டார்.

படப்பிடிப்பு தொடங்கியது

படப்பிடிப்பு தொடங்கியது

கொரோனா மற்றும் ஷாருக்கானின் சொந்தப் பிரச்சினைகள் உள்ளிட்ட சில காரணங்களால் அட்லியின் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டே போனது. இதனால், அட்லியின் பாலிவுட் கனவு தகர்ந்ததாக பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவின. தற்போது, அட்லி லயன் திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கி உள்ளார்.

மும்பையில் நயன்தாரா

மும்பையில் நயன்தாரா

இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று மும்பை விமான நிலையத்தில் இருந்து தனது காரில் ஏறி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகிறது. இதனை அடுத்து அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் லயன் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக நயன்தாரா மும்பை சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது. எங்கு சென்றாலும் விக்னேஷ் சிவனுடன் செல்லும் நயன்தாரா, தனியாக மும்பைக்கு சென்றதால், ரசிகர்கள் பலர் விக்னேஷ் சிவன் எங்கே என்று கேட்டு வருகின்றனர்.

நயன்தாரா விசாரணை அதிகாரியாக

நயன்தாரா விசாரணை அதிகாரியாக

மும்பையில் உள்ள ஃபிலிம் சிட்டி ஸ்டுடியோவில் ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும், இந்த படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் பாலிவுட்டிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், ஷாருக்கான் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X