Nayanthara : ட்ரெண்டிங்கில் இணைந்த நயன்.. மூட் ஸ்விங்ஸ் வீடியோவால் அலறும் இணையவாசிகள்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர்களில் நயன்தாராவும் ஒருவர். இவரை இவரது ரசிகர்கள் நயன் என்றும் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைத்து வருகின்றனர். தொடக்கத்தில் படங்களில் நடித்து வந்த நயன் தனது திருமணத்திற்குப் பின்னர் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி படத்தயாரிப்புகளிலும் ஈடுபட்டு வருகின்றார். தற்போது இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

நயன் தமிழ் சினிமாவிற்குள் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வெளியான ஐயா படத்தின் மூலம் அறிமுகமானார். ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு மீண்டும் படிக்கவே சென்று விடலாம் என இருந்த நயனுக்கு நீ தொடர்ந்து நடி எனக் கூறி உற்சாகப்படுத்தியதில் மோகன்லாலின் பங்கு மிகவும் முக்கியமானது என கூறப்படுகின்றது.

Nayanthara

தொடர்ந்து நடித்து வந்த நயன் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாகும் வாய்ப்பினை சந்திரமுகி படத்தில் பெற்றார். ஒரு கட்டம் வரை ஹோம்லியான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த நயன், அதன் பின்னர் கிளாமரிலும் கலக்கத் தொடங்கினார். இதனால் ரசிகர்கள் நயன் நடித்தால் எப்படியும் கிளாமர் காட்சிகள் இருக்கும் படம் நல்லா இல்லை என்றாலும் பராவாயில்லை நயனுக்காகவே படத்தை பார்க்கலாம் என யோசிக்க வைக்கும் அளவிற்கு கிளாமராக நடித்தார்.

லவ் ஸ்டோரி: குறிப்பாக பில்லா, வில்லு படங்கள் எல்லாம் நயன்தாரா கிளாமர் லிஸ்ட்டில் டாப் இடங்களில் இருக்கும். நடிகை நயன்தாரா தனது ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் சிம்புவை காதலித்தார் என்ற தகவல் வெளியானது. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமாக காதலில் முறிவு ஏற்பட்டது. அதன் பின்னர் வில்லு படத்தில் நடித்தபோது பிரபுதேவா மீது காதல் ஏற்பட்டதால் பிரபு தேவா பெயரை தனது கையில் பச்சை குத்திக் கொண்டார். இருவருக்கும் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு இருந்த காலகட்டதில் இவர்களது காதலும் முறிவுக்கு வந்தது. பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்னர் நயன்தாரா கம்பேக் கொடுப்பதே சிரமம் என பலர் கூறினர்.

Nayanthara

கம்பேக்: ஆனால் கம்பேக் கொடுத்தது மட்டும் இல்லாமல் அதன் பின்னர்தான் ரசிகர்கள் அவரை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவுக்கு உயர்ந்தார். இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டனர். குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்துவதால், படத்தில் அதிகம் நடிப்பதை தவிர்த்து வருகின்றார்.

மண்ணாங்கட்டி: அவரது நடிப்பில் மண்ணாங்கட்டி படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஆனாலும் தனது வருமானத்தை குறைத்துக் கொள்ளக் கூடாது என, அதிகப்படியான விளம்பரங்களில் நடிக்கின்றார். தான் ஒப்புக்கொண்ட விளம்பரங்கள் தொடர்பான பொருட்களை தனது சமூக வலைதளப்பக்கங்களிலேயே புரோமோட்டும் செய்கின்றார்.

விளம்பரம்: இந்நிலையில் டாக்டர் கோமதி என்பவருடன் இணைந்து நயன்தாரா கடந்த ஜனவரியில் பெமி9 பிராண்டில் சானிடரி நேப்கினை வெளியிட்டார். இதனை தொடர்ந்து விளம்பரப்படுத்தி வரும் நயன்தாரா பெண்கள் தங்களுக்கு வசதியான சானிடரி நாப்கினை அணிய வேண்டும் எனவும் ஏற்கனவே போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுகையில் குறிப்பிட்டிருந்தார்.

மூட் ஸ்விங்ஸ்: தற்போது பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் மூட் ஸ்விங்ஸில் அவதிப்படுவதையும், மற்ற சானிடரி நாப்கின்களை பயன்படுத்துவதை தான் விளம்பரம் செய்யும் சானிடரி நாப்கினைப் பயன்படுத்தும்போது மிகவும் சௌகரியமாக இருக்கும் எனவும் விளக்கும் வகையில், ஆவேஷம் படத்தில் ஃபகத் ஃபசில் செய்த ரீல்ஸைப் போல் நடித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

Nayanthara

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X