Nayanthara salary: ஜவானில் 11கோடி.. அன்னபூரணி படத்துக்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: அன்னபூரணி படத்துக்காக நடிகை நயன்தாரா வாங்கி உள்ள சம்பளம் குறித்த இணையத்தில் வெளியாகியுள்ளது.

புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவின் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லீ, கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகை ரேணுகா, பூர்ணிமா ரவி என பலர் நடித்துள்ளனர்.

Lady Superstar Nayanthara salary for Annapoorani

இத்திரைப்படம் டிசம்பர் 1ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

நயன்தாராவின் 75வது படம்: சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பிராமணப் பெண்ணான நயன்தாரா, தனது குடும்பத்திடம் எம்பிஏ படிப்பதாக கூறிவிட்டு, சமையல் கலைஞராகும் முயற்சி செய்கிறார். இதற்கு சத்யராஜ், ஜெய் உதவி செய்கின்றனர். அண்மையில் அன்னபூரணி படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது.

புடிச்சத பண்ணா தப்பா: இதில், எந்தக் கடவுளும் கறி சாப்பிட்டா தப்புன்னு சொன்னதில்லை என்று ஜெய் பேசும் வசனம் கவனம் ஈர்த்துள்ளது. அது மட்டும் இல்லாமல், புடிச்சத பண்ணா லட்சத்தில் ஒருத்தர் இல்ல லட்சம் பேர் சூப்பர் ஸ்டார் ஆகலாம் என்று நயன்தாரா சொல்லும் வசனம் கவனம் ஈர்த்துள்ளது. இன்றைய சூழ்நிலையில், உணவு சார்ந்த அரசியல் அவ்வப்போது பேசுபொருளாகும். அதை உடைத்துப் பேசும் படமாக அன்னபூரணி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அன்னபூரணி படத்தின் சம்பளம்: லேடி சூப்பர் ஸ்டார், கோலிவுட் குயின் என பெயர் எடுத்த நயன்தாரா, இந்த படத்தில் நடிக்க சுமார் ரூ.10 கோடி சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகி பலரையும் வாய்பிளக்க வைத்துள்ளது. நயன்தாராவின் 75வது திரைப்படமான இப்படத்தை ஜீ ஸ்டுடியோ நிறுவனம் மற்றும் டிரைடன்ஸ் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ள இத்திரைப்படம் டிசம்பர் 1ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது.

ஜவான் படத்தின் சம்பளம்: ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் தனது தடத்தை பதித்த நயன்தாரா அந்த படத்திற்காக 11 கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நயன்தாராவை போஸ்டரில் கெத்ததாக காட்டிவிட்டு, படத்தில் வெத்தாக காட்டிவிட்டார் என்று ரசிகர்கள் இயக்குநர் அட்லீ மீது கடுப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X