அன்னபூரணி படத்திற்கு வந்த சிக்கல்.. வன்மையாக கண்டித்த ராஷ்ட்ரீய இந்து மகாசபா!
சென்னை: நயன்தாராவின் 75வது படமான அன்னபூரணி படத்தை ராஷ்ட்ரீய இந்து மகாசபா வன்மையாக கண்டித்துள்ளது.
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக நிலைத்து வருபவர் நடிகை நயன்தாரா.

உலக நாயகன் கமல்ஹாசனை தவிர, தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.
நயன்தாராவின் அன்னபூரணி: சினிமாவிற்கு வந்த புதிதில் ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நாயகியாக நடித்து வந்த நயன்தாரா, தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி அவர் நடித்திருக்கும் படம்தான், அன்னபூரணி. இந்த படத்தில், சமையல் கலையில் நிபுணராக வேண்டும் என்ற ஆசையுடன் போராடும் பெண்ணாக நயன்தாரா நடித்துள்ளார்.
கலவையான விமர்சனம்: அன்னபூரணி படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்தில், நடிகர் ஜெய் நடித்துள்ளார். சத்யராஜ், கார்த்திக் குமார், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். வெள்ளிக்கிழமை வெளியானத் இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

படத்தின் வசூல்: 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உள்ள இத்திரைப்படம் முதல் நாளில் 1.5 கோடியை வசூலித்துள்ளது. தென் மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்துவரும் போதும் இரண்டாம் நாள் வசூல் சிறப்பாகவே இருந்தது.
எச்சரிக்கை: இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்று ராஷ்ட்ரீய இந்து மகாசபா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது இந்த படத்தில், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் படத்தின் கதை அம்சம் இருக்கிறது. இந்த படத்தை இயக்கிய நிலேஷ் கிருஷ்ணா என்பவரையும், படத்தில் நடித்த நயன்தாராவையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
முற்றுகையிடுவோம்: இந்த திரைப்படம் திரையிட்டுள்ள திரையேட்டர்கள் தமிழகம் முழுவதும் முற்றுகையிடப்படும் என்று பகிரங்கமாக எச்சரிக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். தற்போது இவர்களின் எச்சரிக்கை தான் சோசியல் மீடியாவில் புயலை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications











