என்னிடம் இருந்து 'எஸ்கேப்' ஆன ஒரே ஹீரோ விஜய் தான்: லைலா
Recommended Video
சென்னை: என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ விஜய் தான் என்று தெரிவித்துள்ளார் லைலா.
அஜித், சூர்யா, விக்ரம், பிரஷாந்த் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்தவர் லைலா. தில் படத்தில் அவர் சிரிப்பை விவேக் கலாய்த்தது இன்று வரை பேசப்படுகிறது.
குடும்பம், 2 குழந்தைகள் என்றான பிறகு அவர் படங்களில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

லைலா
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்த லைலா தற்போது ஆலிஸ் படம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். புதுமுகம் மணிசந்துரு இயக்கும் இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ரைசா வில்சனும் நடிக்கிறார்.

உன்னை நினைத்து
விக்ரமன் இயக்கத்தில் சூர்யா, லைலா, சினேகா நடித்த படம் உன்னை நினைத்து. இந்த படத்தல் முதலில் விஜய் தான் ஹீரோவாக தேர்வு செய்யப்பட்டார். படப்பிடிப்பு துவங்கிய நிலையில் விஜய் படத்தில் இருந்து வெளியேறினார். லைலா அதை தற்போது நினைவுகூர்ந்துள்ளார்.
விஜய்
தான் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைலா கூறியிருப்பதாவது, இந்த படத்தின் பெயரை கண்டுபிடிங்க. என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ என்று இந்த புகைப்படத்திற்கு தலைப்பு வைக்கிறேன் என்றார்.

பதில்
லைலாவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்த ரசிகர்கள் படத்தின் பெயர் 'உன்னை நினைத்து' என்பதை சரியாக கண்டுபிடித்துள்ளனர். சிலரோ, லைலா-விஜய் ஜோடி சேர்ந்து நடிக்காமல் போனதற்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











