25வது பிறந்தநாள் காணும் லக்ஷ்மி மேனன்.. ரசிகர்கள் & பிரபலங்கள் வாழ்த்து

சென்னை: இளம் வயதிலேயே கதாநாயகியாக அறிமுகமாகி பலரையும் கவர்ந்தவர் லக்ஷ்மி மேனன்.

நடிப்பு, நடனம், பாடல் என பன்முகம் கொண்ட நடிகையாக திகழ்ந்து வருபவர் லக்ஷ்மி மேனன்.

மே 19ம் தேதி 1996ம் ஆண்டு பிறந்த லக்ஷ்மி மேனன் இன்று தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சினிமாவில் அறிமுகம்

சினிமாவில் அறிமுகம்

பரதநாட்டிய கலையில் சிறந்து விளங்கிய லக்ஷ்மி மேனன் அதன் மூலம் சினிமா வாய்ப்புகளை பெற தொடங்கினார். 8ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து நடிக்க தொடங்கினார். முதலில் மலையாள படங்களில் நடிக்க தொடங்கி பின்னர் தமிழ் சினிமாவில் அறிமுகாமாகி பிரபலமானார்.

கமர்ஷியல் ரீதியாக

கமர்ஷியல் ரீதியாக

தமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி படத்தில் அறிமுகமாகி பின்னர் சுந்தர பாண்டியன், குட்டி புலி என சசிக்குமாருடன் தொடர்ந்து 2 படங்கள் நடித்தார். பின்னர் விஷாலுடன் பாண்டிய நாடு படத்தில் நடித்தார். தொடர்ச்சியாக எல்லா படங்களும் கமர்ஷியல் ரீதியாக வெற்றியை பெற்றது.

ரசிகர்களை கவர்ந்தார்

ரசிகர்களை கவர்ந்தார்

சிறந்த அறிமுக நடிகை (Film Fare), சிறந்த நடிகை (State Film Award), என ஒருபுறம் விருதுகளை வாங்கி அடுத்தடுத்த படங்களில் ரசிகர்களை கவர்ந்தார். 2016க்கு பின்னர் 4 வருடம் நடிக்காமல் இருந்த லக்ஷ்மி மேனன் இந்த ஆண்டு மீண்டும் முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார்.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

புலிக்குத்தி பாண்டி படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் லக்ஷ்மி மேனன். 25வது பிறந்தநாள் காணும் லக்ஷ்மி மேனனுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் ட்விட்டரில் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X