»   »  லஜ்ஜாவதி ராய்!

லஜ்ஜாவதி ராய்!

Subscribe to Oneindia Tamil

ஒரு காதலன் ஒரு காதலி படத்தில் லஷ்மி ராய் புகுந்து விளையாடி வருகிறாராம். ராய்வரும் காட்சிகள் எல்லாம் கிளாமர் ராவடியாம்.

தேக்கு மர சிற்பம் போல படு சிறப்பாக இருந்தும் இன்னும் நிமிர முடியாமல் திணறிவருகிறார் லஷ்மி ராய். அவர் நடித்த படங்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான்உள்ளன. இருந்தாலும் பிரேக் கிடைக்காமல் பேஸ்த் அடித்துப் போய்க் கிடக்கிறதுலஷ்மி ராயின் மார்க்கெட்.

இப்போது லஷ்மி கைவசம் இரண்டு முக்கியமான படங்கள் உள்ளன. புதுமுகஹீரோவுடன் நடித்து வரும் ஒரு காதலன் ஒரு காதலி, விஜயகாந்த்துடன் தர்மபுரி எனஇரு படங்களில் நடித்து வருகிறார் லஷ்மி.

இதில் ஒரு காதலன் ஒரு காதலி படம் தான் கோலிவுட்டில் சூட்டைக் கிளப்பிவிட்டுள்ளது. படம் முழுக்க கிளாமர்களே பரம்தானாம். ஒரு காட்சியில் லஷ்மிஅணிந்துள்ள ஷார்ட்ஸை ஹீரோ கழட்டுவது போல காட்சியாம்.

அப்படியா என்று லஷ்மியிடம் ஆச்சரியப்பட்டபோது, காட்சிக்குத் தேவையாகஇருந்ததால் கொஞ்சம் கூடுதல் கிளாமராக நடித்தேன். மற்றபடி ஆபாசமாக அதைபடமாக்கவில்லை.

நடிகை என்றால் இயக்குநர் கூறுகிறபடி நடிக்கத்தான் வேண்டும். இது போட்டி மிகுந்தஉலகம். அதை சமாளிக்க நமது திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டு வந்தேஆக வேண்டும். அதே சமயம் திறமை மட்டும் போதாது, கிளாமரும் கூடுதலாகஇருந்தே ஆக வேண்டும்.

எனவே கிளாமர் காட்டுவதற்கு நான் ஒரு போதும் தயங்கியதே கிடையாது. எனவேதொடர்ந்து எனது கிளாமர் கொடி உசரவே பறக்கும் என்கிறார் பாட போல்டாக.

எல்லாம் சரி, இளம் ஹீரோக்களுடனும் நடிக்கிறீர்கள், இப்போது விஜயகாந்த்துடனும்நடிக்கிறீர்கள். எப்படி சமாளிக்கிறீர்கள்?

வயதான ஹீரோக்கள் என்று கூற முடியாது. அவர்களும் ஒரு காலத்தில் இளைஞர்கள்தான். எனவே அனுபவமும், இளமையும் நிறைந்த ஹீரோக்களுடன் தான் நடிக்கிறேன்.அதில் எனக்கு எந்த அசவுகரியமும் இல்லை என்கிறார் படு யதார்த்தமாக.

ரொம்ப பிராக்டிகல் தான்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil