சமந்தாவுக்கு குடைச்சல் கொடுக்கும் நாக சைதன்யா?.. டைவர்ஸ் ஆன பிறகும் இப்படியா?.. நடிகை சொன்ன சீக்ரெட்?

சென்னை: நடிகை சமந்தா நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு பேரும் தங்களது திருமண வாழ்க்கையை சுமூகமாக நகர்த்திக்கொண்டிருந்த நிலையில் திடீரென விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதனையடுத்து நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்தார் சைதன்யா. இந்நிலையில் சமந்தா குறித்து பிரபல நடிகை லட்சுமி மஞ்சு சில விஷயங்களை பேசியிருக்கிறார்.

கோலிவுட்டில் அறிமுகமாகி முன்னணி ஹீரோக்களுடன் நடித்து; பிறகு டோலிவுட்டிலும் கால் பதித்தவர் சமந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் நடித்தபோது படத்தில் இருந்த காதல் உணர்வு; ஆஃப் கேமராவிலும் இரண்டு பேருக்கும் பரவிவிட்டது. இதனால் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.

விவாகரத்து: திருமணம் செய்து இரண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதராக வாழ்ந்துவந்தார்கள். சமந்தாவும் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்திவந்தார். சைதன்யாவும் அதற்கு ஆரம்பத்தில் சப்போர்ட்டாகவே இருந்தார். ஆனால் நாகார்ஜுனா உள்ளிட்ட குடும்பத்தின் மூத்தவர்களுக்கு சமந்தா திருமணத்துக்கு பிறகும் நடிப்பதில் விருப்பமில்லை என்று கூறப்பட்டது. இந்த விஷயம் நாளடைவில் பெரிதாகி பிரச்னையாக வெடித்தது என்றும்; அதனால் சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து பெற்றுவிட்டார்கள் எனவும் பேச்சுக்கள் உண்டு.

Lakshmi Manchu says Samantha didn t get opportunities in Telugu because of Naga Chaitanya Nagarjuna s family
Photo Credit:

2வது திருமணம்: நாக சைதன்யாவை பொறுத்தவரை சமந்தாவை பிரிந்த பிறகு சில வருடங்கள் சிங்கிளாக இருந்துவிட்டு நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை எடுத்து திரும்பிய சமந்தாவோ குஷி, சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்தார். இரண்டுமே படுதோல்வியை பரிசாக கொடுத்தன. பிறகு குட்டி பிரேக் எடுத்துவிட்டு சிட்டாடல் வெப் சீரிஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதுவும் ஓரளவுக்கு நல்ல பெயரை கொடுத்தது.

இப்போதைய நிலைமை: சிட்டாடல் எதிர்பார்த்த பெயரை பெற்றுக்கொடுத்ததால் அடுத்தடுத்து சாம் நடிப்பார் என்றே அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தார்கள். ஆனால் இப்போது கைவசம் ஒரு வெப் சீரிஸ் மட்டுமே வைத்திருக்கும் அவர்; பெரிதாக வேறு எந்த ப்ராஜெக்ட்டிலும் கமிட்டாகவில்லை என்றே தெரிகிறது. இந்நிலையில் பிரபல நடிகையான லட்சுமி மஞ்சு சமந்தா குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

சமந்தா பற்றி லட்சுமி மஞ்சு?: அவர் அந்தப் பேட்டியில், " தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரின் முன்னாள் மனைவி ஒருவர் இருக்கிறார். அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டது. அதற்கு பிறகு யாரும் அவருக்கு பட வாய்ப்புகள் தருவதில்லை. ஏற்கனவே அவர் கமிட்டாகியிருந்த படங்களும் கைவிட்டு போயின. அந்த நடிகைக்கு வாய்ப்பு கொடுத்தால் நடிகர் எதுவும் நினைத்துக்கொள்வார் என சொல்கிறார்கள். ஆனால் நடிகையோ நடிப்பதற்கு தயாராகத்தான் இருக்கிறார். ஒரு ஆணுக்கு இதுபோல் நடக்காது. ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. திருமணமானால் குழந்தைகள் உள்ளிட்ட எல்லா பொறுப்புகளையும் சுமக்க வேண்டும்" என்றார். இதனைப் பார்த்த ரசிகர்களோ லட்சுமி மஞ்சு சமந்தாவைத்தான் மறைமுகமாக சொல்கிறாரா? நாக சைதன்யாதான் சமந்தாவின் கரியரை கெடுக்கிறாரா என பல கேள்விகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X