குச்சுப்புடி நடனத்தில் கலக்கி வரும் நடிகை லட்சுமிமேனன் !
கொச்சி : நடிகை லட்சுமிமேனனின் திரைப்படங்கள் சமீபகாலமாக எதுவும் வெளியாகாமல் இருக்கின்ற நிலையில் அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என ரசிகர்கள் தெரிந்து கொள்ள மிக ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர்.
கடைசியாக றெக்க படத்தில் நடித்திருந்த லட்சுமிமேனன் தற்போது எங் மங் சங் மற்றும் பெயரிடப்படாத ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் திரைப்படங்களில் லட்சுமியை காண முடியாத ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு வரும் லட்சுமிமேனன் தற்பொழுது குச்சிப்புடியில் கலக்கி வருகிறார்.

அடுத்தடுத்த வாய்ப்புகள்
பள்ளி படிக்கும்போதே நடிக்கத் தொடங்கிய லட்சுமிமேனன் தமிழில் சுந்தர பாண்டியன் திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். சுந்தரபாண்டியன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வரிசை கட்டி நின்றன.

பிடித்தமானவர் ஆனார்
ஆரம்பமே அமர்க்களமாக அமைந்த லட்சுமி மேனனுக்கு சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த அறிமுக நாயகி உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிடித்தமானவர் ஆனார். இதை தொடர்ந்து இவர் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றிப் படங்களாக அமைய கொம்பன், ஜிகர்தண்டா உள்ளிட்ட திரைப்படங்களில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

கமர்ஷியல் ரீதியாக
தல அஜித்துடன் ஏதாவது ஒரு சின்ன கதாபாத்திரத்திலாவது நடித்து விடமாட்டோமா என பல ஹீரோயின்களும் ஆசைப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், வேதாளம் திரைப்படத்தில் அஜித்தின் தங்கையாக லட்சுமிமேனன் நடித்து பிரமாதப்படுத்தி இருப்பார். பல்வேறு சென்டிமெண்ட் காட்சிகளையும், அதிரடி சண்டைக் காட்சிகளையும் கொண்டு உருவான வேதாளம் திரைப்படம் கமர்ஷியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்த நிலையில் இந்த திரைப்படம் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டடித்தது.

கிடப்பில் போடப்பட்டு
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே லட்சுமிமேனனின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருக்கின்ற நிலையில், றெக்க திரைப்படம் இவரது நடிப்பில் கடைசியாக வெளியானது. அதன் பின் எங் மங் சங், சிப்பாய் என இவர் நடித்துவரும் அனைத்து திரைப்படங்களும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கிடப்பில் போடப்பட்டு இன்றுவரை வெளியாகாமல் தவித்து வருகிறது.

குச்சிப்புடி நடனம்
இந்நிலையில் லட்சுமிமேனனை திரையில் காண முடியாமல் தவித்து வரும் அவரது ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் தோன்றி அப்டேட்களை புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் பதிவிட்டு வரும் லட்சுமிமேனன் தற்போது வெளியிட்டுள்ள குச்சிப்புடி நடனம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நிற்கும் விதத்தை
லட்சுமிமேனன் ஒரு சிறந்த நடிகையாக நாம் அனைவரும் அறிந்திருக்கும் நிலையில் இவர் குச்சிப்புடி, பரதநாட்டியம் உள்ளிட்ட நடன கலைகளில் கைதேர்ந்தவர் ஆவார். அதிலும் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் குச்சிப்புடி, பரதநாட்டியம் வகுப்புகளும் எடுத்துவரும் லட்சுமி மேனன் தற்பொழுது குச்சிப்புடியில் வரும் ஒரு சில அசைவுகளில் நிற்கும் விதத்தை மிகச் சிறப்பாக செய்து அந்த புகைப்படங்களை தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்து பாராட்டுகளை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











