விஷாலும் நானும் நிஜத்தில் முத்தம் கொடுத்தோமா?... கோபத்தில் லட்சுமி மேனன்

சென்னை: விஷால் தயாரித்து நடிக்கும் படம் 'நான் சிவப்பு மனிதன்'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் லட்சுமி மேனன்.

இதற்கு முன்னர் இவர்கள் பாண்டிய நாடு படத்திலும் ஜோடி சேர்ந்திருந்தனர். அப்போது இவர்களது கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் ரசித்ததால் மீண்டும் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர் எனக் கூறப்படுகிறது.

இப்படத்தில் விஷாலுக்கு லட்சுமி மேனன் லிப் லாக் முத்தம் கொடுத்திருக்கிறார். குடும்பப் பாங்கான நடிகை எனப் பெயரெடுத்த லட்சுமிமேனன், இவ்வாறு லிப் லாக் காட்சிகளில் நடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முத்தத்திற்கு சம்மதம்....

முத்தத்திற்கு சம்மதம்....

பாண்டியநாடு படத்தைத் தொடர்ந்து விஷால் மற்றும் லட்சுமிமேனன் இருவரும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளினி லட்சுமிமேனனிடம் ‘முத்தக்காட்சிகளில் நடிப்பீர்களா?' எனக் கேட்டக் கேள்விக்கு கதைக்குத் தேவைப்பட்டால் சம்மதம் எனத் தெரிவித்திருந்தார் லட்சுமிமேனன்.

வடை போச்சே....

வடை போச்சே....

அப்போது விஷால், ‘அடடா இது பாண்டிய நாடு பட ஷூட்டிங்கில் தெரியாமல் போய் விட்டதே' என நகைச்சுவையாக கூறி இருந்தார். இந்நிலையில், தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படமான நான் சிகப்பு மனிதனில் இருவருக்குமான முத்தக்காட்சி சமீபத்தில் படமாக்கப் பட்டது.

குடும்பப்பாங்கான நடிகை...

குடும்பப்பாங்கான நடிகை...

தனது முந்தையப் படங்கள் மூலம் குடும்பப்பாங்கான நடிகை என்றப் பெயரைப் பெற்றிருந்த லட்சுமிமேனன் தடாலடியாக இது போன்ற முத்தக் காட்சியில் நடித்தது திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதனைத் தொடர்ந்து விஷாலுக்கும், லட்சுமிமேனனுக்கும் காதல் என கிசுகிசு கிளம்பி விட்டதாம்.

நடிப்பு என் தொழில்....

நடிப்பு என் தொழில்....

இது போன்ற கிசுகிசுக்களைக் கேள்விப்பட்டு லட்சுமிமேனன் கோபம் அடைந்துள்ளாராம். இது குறித்து அவர் கூறியதாக தமிழ் செய்தித்தாள் ஒன்றில் கூறப்பட்டுள்ளதாவது, ‘நடிப்பு என் தொழில். அதற்கு தேவையானதை செய்துதான் ஆகவேண்டும்.

கதைக்கு தேவைப்பட்டது....

கதைக்கு தேவைப்பட்டது....

படத்தின் கதையை இயக்குனர் சொல்லும்போதே இந்த இடத்தில் இப்படி ஒரு முத்தக்காட்சி இருக்கிறது என்று சொன்னார். கதைக்கு அது அவசியம் என்றும் நானும் உணர்ந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இது வெறும் நடிப்பு தான்....

இது வெறும் நடிப்பு தான்....

இதை ஏன் இவ்வளவு பெரிது படுத்துறாங்கன்னு புரியல. நானும், விஷாலும் நிஜத்தில முத்தம் கொடுத்துக்கொண்டால் தப்பு. சினிமாவுல நடிக்கத்தான் செய்திருக்கோம்.

நல்லா எழுதுங்க...

நல்லா எழுதுங்க...

இப்படி பல கிசுகிசுக்கள் வரும், வதந்திகள் வரும்னு எனக்கு முன்பே தெரியும். ஆனா இவ்வளவு பெருசா வரும்னு எதிர்பார்க்கல. என்னை பற்றி வந்திருக்கும் முதல் கிசுகிசு. நல்லா எழுதுங்க நானும் ரசிக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X