நாளைக்கு ரிசல்ட்.. திக் திக் மனசோடு காத்திருக்கும் லட்சுமி மேனன்!
இரண்டே படங்களில் முன்னணி நடிகை ஆகி விட்டாலும் லட்சுமி மேனனுக்கு படிப்பிலும் ஆர்வம் அதிகம்.
எனவே மஞ்சப்பை மற்றும் சிப்பாய் படங்களின் ஷூட்டிங்கிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு சொந்த ஊரான கேரளா போய் படித்து தேர்வு எழுதிவிட்டு வந்தார்.
கேரளாவில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. இதில் நல்ல மார்க்கோடு தேர்ச்சி பெறாவிட்டாலும், பெயிலாகாமல் இருந்தால் போதும் என வேண்டிக் கொண்டுள்ளாராம் லட்சுமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனக்கு மார்க் முக்கியமில்ல. ஸ்கூல் போய் படிச்சப்ப கூட நான் இப்படித்தான். ஆனால் பாஸ் செய்து விட வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இந்த தேர்விலும் பாஸாகிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனாலும் ஒரு டென்ஷன் இருக்கத்தான் செய்கிறது," என்றார்.
மஞ்சப்பை, சிப்பாயி படங்களைத் தொடர்ந்து விஷாலுடன் வருஷநாடு படத்திலும் நாயகியாக நடிக்கிறார் லட்சுமி மேனன்.


Click it and Unblock the Notifications












