twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வீதி நாடகக் கலைஞராக லட்சுமி மேனன்!

    By Shankar
    |

    கண்ணால் பேசும் காதல் நாயகியாக மட்டுமே வந்துகொண்டிருந்த லட்சுமி மேனன், தனது அடுத்த படத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் சமூக சேவகியாக நடிக்கிறார்.

    படத்துக்குப் பெயர் சிப்பாய். சிலம்பாட்டம்' படத்தை தொடர்ந்து சரவணன் இயக்கும் படம் இது.

    கவுதம் கார்த்தி

    கவுதம் கார்த்தி

    இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் லட்சுமி மேனன். எஸ்.எஸ்.கிரியேஷன்ஸ் என்னும் பேனரில் ஸ்ரீநாத் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

    கல்லூரிப் பெண்

    கல்லூரிப் பெண்

    இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தில் லட்சுமி மேனன் சமூக விழிப்புணர்வு செயல்களில் ஈடுபடும் துணிச்சல் மிக்க கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

    வீதி நாடகம்

    வீதி நாடகம்

    ஊர் ஊராக சென்று வீதிகளில் விழிப்புணர்வு நாடகங்களை அரங்கேற்றி சமூகத்திற்கு தீங்கு செய்யும் விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டுவது இவர் விருப்பப் பணி.

    விழிப்புணர்வு

    விழிப்புணர்வு

    குறிப்பாக தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுகள், தண்ணீரில் கலப்பதால் அதை பயன்படுத்தும் மனிதர்கள் என்னவிதமாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தெருக்கூத்தாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன்.

    மதுவுக்கு எதிராக

    மதுவுக்கு எதிராக

    மேலாக லட்சுமி மேனனின் அறிமுக காட்சியே மதுவுக்கும் புகைபிடித்தலுக்கும் எதிரான மேடை நாடக காட்சியாகத்தான் அமைக்கப்பட்டுள்ளதாம்.

    English summary
    Lakshmi Menon is playing as a social activist in Sippai movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X