»   »  சூனாபானா முதல் கொம்பன் வரை... லட்சுமி மேனனால் மட்டும் எப்படித்தான் இப்படி நடிக்க முடிகிறதோ?

சூனாபானா முதல் கொம்பன் வரை... லட்சுமி மேனனால் மட்டும் எப்படித்தான் இப்படி நடிக்க முடிகிறதோ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று..அது, ஏதோ உன்னிடம் இருக்கிறது... என்று பாடத்தோன்றுகிறது லட்சுவை பார்த்து (லட்சுமி மேனனை தமிழ்கூறும் நல்லுலக ரசிகர்கள் அப்படித்தானே அழைக்கிறார்கள்).. அது எப்படிங்க உங்களால மட்டும் அப்படி முடிகிறது என்று தலைகிறுகிறுத்து கிடக்கிறார்கள் சக நடிகைகள்.

அப்படி என்னதான் செய்துவிட்டார், லட்சு.. என்ன தேசிய விருதுகளாக வாங்கி குவித்துவிட்டாரா என்று பொறுமுபவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் சொல்ல முடியும், இது அதுக்கும் மேல..

[லட்சுமி மேனன் படங்கள்]

குடும்ப குத்து விளக்கு

குடும்ப குத்து விளக்கு

பின்ன, தமிழின் முன்னணி நாயகி என்று முத்திரை குத்தப்பட்ட லட்சு, இதுவரை கவர்ச்சியே காண்பிக்கவில்லை என்பது சாதனையில்லையா. 'கவர்ச்சி காண்பிக்காத குடும்ப குத்துவிளக்கு' என்று ஒரு விருது இருந்தால் அத இந்த அம்மணிக்கு பார்சல் பண்ணுங்கப்பா என்று லட்சுவின் பரம ரசிக சிகாமணிகள் பெட்டிசன் போடும் நிலைதானே உள்ளது.

அடி, கருப்பு நிறத்தழகி

அடி, கருப்பு நிறத்தழகி

இத்தனைக்கும் லட்சுமி ஒன்றும் ஐசுமாதிரி உலக அழகியெல்லாம் கிடையாது. பக்கத்து வீட்டு பெண் போன்ற ஒரு தோற்றம்தான். இதை வைத்துக் கொண்டு இந்த அம்மணி கோலிவுட்டில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது உண்மையிலேயே வியப்புதான்.

லட்சு, லட்சுதான்

லட்சு, லட்சுதான்

சுந்தரபாண்டியனில் ((சூனாபானா)ஆரம்பித்த லட்சுவின் ராசி, இதோ, கொம்பன் வரை தொடருகிறது. எந்த இடத்திலும் முகம் சுழிக்கும் காட்சிகளில் அவர் நடித்தது கிடையாது என்பதால், குடும்பத்தோடு போய் குதுகலித்து பார்க்க வேண்டிய படமாக லட்சு நடித்த படங்கள் உள்ளன.

என்ன அடக்கம்..

என்ன அடக்கம்..

சிலருக்கு தூக்கத்தில் இருந்து விழித்ததை போல இப்போது ஒரு ஞாபகம் மின்னல் வேகத்தில் பளிச்சிடுமே.. 'நான் சிகப்பு மனிதன்' படத்தில் விஷாலுடன் எவ்வளவு நெருக்கமாக நடித்தார் லட்சு என்பது. ஆம், ஆனால் அப்படி ஒரு கேரக்டரில் வேறு யார் நடித்திருந்தாலும், தியேட்டரில் அக்கா, தங்கையுடன் படம் பார்க்க சென்றவர்கள், 'தாவணி கனவுகள்' பாக்கியராஜாக மாறி சில்லரையை சிதற விட்டிருப்பார்கள். ஆனால் லட்சு, அந்த கேரக்டரிலும் அடக்கியே வாசித்தார்.

ஜல்சா காட்சியிலும் சமாளிப்பு

ஜல்சா காட்சியிலும் சமாளிப்பு

விஷாலுடன், தண்ணீரில் ஜலக்கிரீடை செய்யும் காட்சியில், ஏதாவது தெரியுமா என்று வாய் பிளந்திருந்த ரசிகர்களுக்கும், வாய்க்குள் ஏசி காற்று போனதுதான் மிச்சமே தவிர, ஒன்றும் வாய்க்கவில்லை என்பது நினைவிருக்குமே..

முதலிரவு நடந்துடுச்சா, சொல்லவேயில்ல

முதலிரவு நடந்துடுச்சா, சொல்லவேயில்ல

இதோ, இப்போது ரிலீசான கொம்பனில், கணவனுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய காட்சியில், எப்படி பழைய கால பத்மினி போல நடித்திருந்தார் என்று படம் பார்த்தவர்களுக்கு தெரியுமே.. முதலிரவு நடந்தது என்பதே, ஷவரில் கார்த்தி குளிக்கும்போது பாடும், 'நேத்து ராத்திரி யம்மா' பாட்டு மூலமாகத்தான் பலருக்கும் தெரிந்திருக்கும் என்றால், என்ன நாசுக்கு..என்ன நளினம்.. அடடா..

ரேவதி, சினேகா இப்படி..

ரேவதி, சினேகா இப்படி..

ஆனானப்பட்ட ரேவதியே தேவர்மகன் படத்தின் இஞ்சி இடுப்பழகி பாட்டில், ஆடை அவிழ்க்க வேண்டியதாயிற்று. சிலம்பாட்டம் படத்தில், சிலம்பரசனுடனான காட்சியில், அதுவரை பொத்தி, பொத்தி வைத்திருந்த நல்ல பெயரை, சேலையுடன் அவிழ்த்து எறிய வேண்டியதாயிற்று சினேகாவுக்கு.. பல்வேறு ஆபாச முகபாவங்களுடன், விலைமாது கேரக்டரிலும் நடித்தவர்தானே சினேகா.

கதையை நம்பலாம்

கதையை நம்பலாம்

ஆனால், தமிழின் முன்னணி கதாநாயகி ஒருவர், இன்னமும் ஆடை அவிழ்க்காமல், அல்லது அவிழ்க்க தூண்டப்படாமல் இருப்பது ஒரு நல்ல முன்னேற்றமே.. இனியாவது சதையை நம்பாமல், கதையை மட்டும் நம்பி படம் எடுக்க லட்சுக்கள் உதவுவார்கள் என்று நம்பலாம்.

அது என்ன மேனன்

அது என்ன மேனன்

இறுதியாக, ஆனால் உறுதியாக ஒன்றே ஒன்று.. கொம்பனில் ஜாதி பெயர் சீண்டப்படவில்லை என்று படக்குழு சொல்கிறது, படம் பார்த்த பலரும் சொல்கிறார்கள். ஆனால் சில ரசிகர்களோ ஜாதி பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கின்றனர். அது எப்படி தெரியுமா.. ஒரு ரசிகரின் கமெண்ட் இது, "கொம்பனில் ஜாதி பெயர் பயன்படுத்தப்படவில்லை என்கின்றனர், ஆனால், லட்சுமி படித்து வாங்கிய பட்டமா மேனன்".

English summary
Lakshmi Menon who has made a quick mark for herself in Kollywood hesitation to do glamorous roles.
Please Wait while comments are loading...