தமிழ்ப் பையன்களைப் பிடிக்காத லட்சுமி மேனனுக்கு 17 வயசு.. சென்னையில் கொண்டாட்டம்!
தமிழ்ப் பையன்கள் வேண்டுமானால் என்னைக் காதலித்துக் கொள்ளட்டும்... ஆனா நான் ஒரு மலையாளியைத்தான் காதலிச்சு கல்யாணம் செஞ்சுப்பேன் என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விட்ட லட்சுமி மேனன் நேற்று சென்னையில் தனது 17வது பிறந்த நாளைக் கொண்டாடினார்.

மலையாளத்திலிருந்து...
வழக்கம் போல கோலிவுட் மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்த நடிகை லட்சுமி மேனன். கொச்சியைச் சேர்ந்தவர். ஆனால் சின்ன வயதிலிருந்தே சென்னையில் அதிக நாட்கள் வசித்ததால் தமிழை அட்சர சுத்தமாகப் பேசுவது இவருக்கு கூடுதல் தகுதி ஆகிவிட்டது.

கும்கி
இரண்டு மலையாளப் படங்கள் நடித்திருந்தாலும், அவரை அடையாளம் காட்டியது கும்கிக்காக பிரபு சாலமன் தேர்வு செய்த போதுதான். ஆனால் அந்தப் படத்துக்கும் முன்பாகவே வெளியானது லட்சுமி மேனன் - சசிகுமார் ஜோடியாக நடித்த சுந்தரபாண்டியன்.

அடுத்தடுத்த ஹிட்
சுந்தரபாண்டியன் வெளியாகி சில தினங்களுக்குப் பின் கும்கி வெளியானது. இரண்டுமே பெரிய வெற்றிப்படங்கள். அடுத்தடுத்த ஹிட் கொடுத்ததில் அம்மணியின் சம்பள ரேஞ்ச் எங்கேயோ போய்விட்டது.

5 புதுப்படங்கள்
மஞ்சப் பை, சிப்பாயி, குட்டிப்புலி, பாண்டியநாடு உள்பட இப்போது 5 புதுப்படங்களில் நடிக்கிறார் லட்சுமி. இவற்றில் குட்டிப்புலி அடுத்த மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது.

17வது பிறந்த நாள்
பார்க்க பெரிய பெண் மாதிரி காட்சி தரும் லட்சுமி மேனனுக்கு 16 வயதுதான் முடிந்துள்ளதாம். நேற்று 17வது பிறந்த நாள். ஒன்பதாம் வதுப்பு படிக்கும்போதே நடிக்க வந்த அவர், கடந்த மார்ச் மாதம்தான் 10ம் வகுப்பு தேர்வெழுதினார்.

சென்னையில்
தனது பிறந்த நாளை சென்னையில் கொண்டாடிய லட்சுமி மேனன், "என் பாட்டியுடன் ஷாப்பிங் போய் தங்கச் சங்கிலி வாங்கினேன். மறக்க முடியாத பிறந்த நாள் இது," என்றார்.


Click it and Unblock the Notifications











