கும்கி நாயகி அல்லிக்கு இன்றுடன் 24 வயசு..விஐபிக்கள் வாழ்த்து!
சென்னை : நடிகை லட்சுமி மேனன் இன்று தனது 24வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
தமிழ் சினிமவாவின் தொடக்கத்தில் இருந்து 80'ஸ்,90'ஸ் என பல தரப்பட்ட காலகட்டமாக பிரிக்கலாம். ஆரம்ப காலம் முதல் இன்று வரை பல ஹரோயின்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளனர். ஒவ்வொரு ஹீரோயினுக்கும் ஒரு தனித்துவம் இருக்கும் சிலருக்கு அழகான கண்கள், சிலருக்கு அழகான தோற்றம், சிலருக்கு அழகான குரல். எனவே இதுபோன்ற அம்சங்கள் தான் ஒரு ஹீரோயினை காலம் கடந்து பேச வைக்கும்.

ஹீரோயினாக நடிப்பதற்கு நல்ல கலர், உடலிடை அனைத்தும் வேண்டும் என்பதை தாண்டி நல்ல நடிப்பு திறன் வேண்டும் என பேசினாலும். அதிகம் ரசிக்க படுபவர்கள் கவர்ச்சி உடையவர்கள்தான். ஆனால் தற்போது தமிழ் சினிமாவில் கவர்ச்சியை விரும்பாமல் கீர்த்தி சுரேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றவர்கள் பல ரசிகர்களை வைத்துள்ளார்கள். அந்த வரிசையில் தமிழ் சினிமாவை தாக்கிய ஒரு நடிகைதான் லட்சுமி மேனன்.
முதலில் மலையாள சினிமாவில் அறிமுகமான இவர், தன் 16வது வயதிலேயே தமிழ் சினிமாவில் கால் வைத்த இவர், சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் அறிமுகமானார். இவ்வளவு சிறிய வயதில் சுந்தரபாண்டியன் படத்தில் தன் அழகான நடிப்பை வெளிப்படுத்தியவர் பல இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஒரு வகையில் லட்சுமி மேனன் இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய அம்சமாக இருந்தார்.

அதை தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் கும்கி படத்தில் நடித்தார்.அந்த படமும் வெற்றி படமாக அமைந்து, லட்சுமி மேனன் வெற்றி நாயகியாக பலராலும் பேசப்பட்டார். யார் இந்த பெண்? அழகான ஹோம்லி லுக், மாநிறம் என பார்ப்பதற்கு நம் பக்கத்து வீட்டு பெண் போல இருந்து கொண்டு பலரையும் கொள்ளைகொள்கிறாளே! என்ற கேள்வி பல தமிழ் சினிமா ரசிகர்களுகிடையே எழுந்தது. ஹீரோயின் என்றால் வெள்ளை தோல், ஒல்லி போன்ற கட்டுப்பாடுகளை உடைத்து வந்தார் லட்சுமி மேனன்.

அவரின் ஆரம்ப காலத்தில் பெரிதும் பேசப்பட்ட ஹீரோயினாக வலம் வந்தார். அதன் பின் பாண்டிய நாடு, வேதாளம், மிருதன், கொம்பன் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அதிகம் தேடப்படும் நடிகையாக மாறினார். தமிழ் சினிமாவில் மிக விரைவாக வளரப்படும் ஹீரோயினாகவும் கருதப்பட்டார். இன்று வரை தல அஜித்துடன் நடித்த வேதாளம் படத்தில் இவரின் நடிப்பு பேசப்பட்டு வருகிறது.
இவர் நடிபத்தோடு மட்டுமில்லாமல் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் குக்குரு குக்குரு என்ற பாடலையும் பாடியுள்ளார். அது மட்டுமில்லாமல் பல ஹீரோயின்கள் தங்களின் முதல் படத்திலேயே அபத்தமான கவர்ச்சியை காட்டும் நிலையில், இத்தனை படங்கள் நடித்தும் லட்சுமி மேனன் கவர்ச்சியை காட்ட விரும்பவில்லை என்பதே உண்மை. இப்படி பல நல்ல குணங்களையும் அபரிவிதமான நடிப்பையும் கொண்ட இவர் கடைசியாக விஜய்சேதுபதியுடன் றெக்கை படத்தில் நடித்தார்.

அதன் பின் சில வருடங்களாக தமிழ் சினிமாவில் முகம் காட்டாமல் இருப்பது அவரின் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் கண்டிப்பாக சிப்பாய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுப்பார் என்று பலராலும் எதிர்பார்க்கபடுகிறது. அவரின் பிறந்தநாளான இன்று பல ரசிகர்கள்,பிரபலங்கள் என அனைவரிடமிருந்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











