»   »  என்னை களங்கப்படுத்த சதி.. படிப்பைக் கெடுக்கவே போலி ஆபாச வீடியோ! - லட்சுமி மேனன்

என்னை களங்கப்படுத்த சதி.. படிப்பைக் கெடுக்கவே போலி ஆபாச வீடியோ! - லட்சுமி மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னைக் களங்கப்படுத்தவும் படிக்க விடாமல் தடுக்கவும் சதி நடக்கிறது. அதற்காகத்தான் என் முகத்தை மார்பிங் செய்து ஆபாச வீடியோ வெளியிட்டுள்ளனர்.

லட்சுமி மேனன் பெயரில் ஆபாச வீடியோ படங்கள் இணைய தளங்களிலும் வாட்ஸ் ஆப் குழுக்களிலும் சமீபத்தில் பரவியது. இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. வீடியோவில் இருப்பது லட்சுமிமேனன்தான் என சிலர் கற்பூரம் அடிக்காத குறையாகக் கூறிவந்தனர்.

Lakshmi Menon denies her 'nude video'

சிலர் போலிப் படம் என்றனர்.

இப்போது இந்த வீடியோ குறித்து லட்சுமிமேனன் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அந்த ஆபாச வீடியோ படத்தில் இருப்பது நான் அல்ல. யாரோ என்னை களப்படுத்துவதற்காக திட்டமிட்டு இந்த படத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆபாச வீடியோவில் இருக்கும் பெண்ணின் முகத்துக்கும் என் முகத்துக்கும் சம்மந்தமே இல்லை. அந்த வீடியோ உண்மையானது இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் இப்போது பிளஸ்டூ தேர்வுக்காக படித்துக் கொண்டு இருக்கிறேன். என்னை படிக்கவிடாமல் செய்யவும், கவனத்தை திசை திருப்பவும் இந்த சதி செயல் செய்யப்பட்டு இருக்கலாம் என நினைக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Actress Lakshmki Menon denied that the recent nude video rounding in social media is morphed one with her face.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil