»   »  'கொ.மு. - கொ.பி.':- லக்ஷ்மி மேனனின் அதிரடி மாற்றம்

'கொ.மு. - கொ.பி.':- லக்ஷ்மி மேனனின் அதிரடி மாற்றம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கொம்பன் படத்தில் நடித்ததில் இருந்து லக்ஷ்மி மேனனிடம் அப்படி ஒரு மாற்றமாம்.

புத்தகப் பையுடன் பள்ளிக்கு செல்லும்போதே மேக்கப் போட்டு கேமராவுக்கு முன்பு நடிக்க வந்தவர் லக்ஷ்மி மேனன். நடிக்க வந்தபோதிலும் அவ்வப்போது தனது சொந்த மாநிலமான கேரளாவுக்கு சென்று பள்ளிப் படிப்பையும் தொடர்ந்தார். இப்படி படப்பிடிப்பு தளத்திற்கும் பள்ளிக்குமாக சென்ற அவர் ஒரு வழியாக பிளஸ் டூ முடித்துள்ளார்.

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் லக்ஷ்மி.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

லக்ஷ்மி மேனன் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அந்த இடம் கலகலப்பாக இருக்கும். கேரளத்து பெண் குட்டி எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்.

கூட்டம்

கூட்டம்

படப்பிடிப்பு தளத்தில் லக்ஷ்மி மேனன் தமிழ் கலந்த மலையாளத்தில் பேசுவதை கேட்கவே அவரை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அப்படி வாய் வலிக்காமல் பேசுவார் லக்ஷ்மி.

கொம்பன்

கொம்பன்

கார்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடித்த கொம்பன் படப்பிடிப்பில் லக்ஷ்மி மேனனை பார்த்தவர்கள் அவரா இவர் என்று ஆச்சரியப்பட்டுள்ளனர். காரணம் அம்மணி படப்பிடிப்புதளத்தில் யாருடனும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.

அமைதி

அமைதி

கொம்பன் படத்தில் நடிக்கையில் படப்பிடிப்புக்கு வந்தால் லக்ஷ்மி அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்துள்ளார். மேலும் யாராவது வந்து பேச்சு கொடுத்தால் அதுவும் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளித்துள்ளார்.

மாற்றம்

மாற்றம்

லக்ஷ்மி மேனனுக்கு தெளிவு வந்துவிட்டது. அதனால் தான் இப்படி ஒரேயடியாக மாறிவிட்டார் என்று கோடம்பாக்கத்தில் பேசிக் கொள்கிறார்கள். தயாரிப்பாளர்களின் மனம் கவர்ந்த நாயகி லக்ஷ்மி மேனன். அவர் அடுத்தடுத்து ஹிட் கொடுத்து வரும் நடிகை ஆவார்.

English summary
Lakshmi Menon who used to be a chatterbox in the shootingspots has become so quiet now.
Please Wait while comments are loading...