»   »  என்னைப் பற்றி இவ்ளோ தானா, நிறைய கிசுகிசுக்களை எதிர்பார்க்கிறேன்: லக்ஷ்மி மேனன்

என்னைப் பற்றி இவ்ளோ தானா, நிறைய கிசுகிசுக்களை எதிர்பார்க்கிறேன்: லக்ஷ்மி மேனன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்களை எதிர்பார்ப்பதாக நடிகை லக்ஷ்மி மேனன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் லக்ஷ்மி மேனன். பேரழகியாக இல்லாவிட்டாலும் அடுத்த வீட்டுப் பெண் போன்று அம்சமாக இருக்கும் அவரை தமிழக ரசிகர்களுக்கு பிடித்தவிட்டது. அதனால் லக்ஷ்மியை கொண்டாடித் தீர்க்கிறார்கள்.

அவரும் தன்னை ஆதரிக்கும் கோலிவுட்டில் பல படங்களில் நடிக்க விரும்புகிறார்.

[லக்ஷ்மி மேனன் படங்கள்]

கிசுகிசு

கிசுகிசு

பொதுவாக கிசுகிசுக்களை படித்தால் நடிகைகள் கடுப்பாகி விடுவார்கள். சிலர் அதை பற்றி திட்டி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பார்கள், சிலர் அட போங்கப்பா என்று கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள்.

லக்ஷ்மி

லக்ஷ்மி

லக்ஷ்மி மேனன் சற்று வித்தியாசமானவராக உள்ளார். தன்னைப் பற்றி எழுதப்படும் கிசுகிசுக்களை விரும்பிப் படிக்கிறார்.

மேலும்

மேலும்

என்னைப் பற்றி மேலும் பல கிசுகிசுக்கள் வரும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். அவைகளை படிப்பது ஜாலியாக உள்ளது என்கிறார் லக்ஷ்மி.

பப்ளிசிட்டி

பப்ளிசிட்டி

செய்திகளை விட இந்த கிசுகிசுக்கள் மூலம் தான் அதிகம் பப்ளிசிட்டி அதாவது விளம்பரம் கிடைப்பதாக லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.

கொம்பன்

கொம்பன்

லக்ஷ்மி மேனன் கார்த்தி ஜோடியாக நடித்துள்ள கொம்பன் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lakshmi Menon told that, 'I am waiting for more gossips about me, because reading them is real fun.'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil