இரட்டை கொண்டாட்டத்தில் நடிகை லட்சுமி மேனன்– ரசிகர்களுக்கும் “டபுள் டிரீட்”!
சென்னை: திரைப்பட உலகத்தில் தற்போதைய ஹாட் டாக் நடிகை லட்சுமி மேனன் பற்றிதான்.
வரிசையாக படங்களில் நடித்துக் கொண்டே இருக்கும் லட்சுமி மேனனின் "டபுள் டிரீட்"டால் கோலிவுட்டும், மல்லுவுட்டும் அல்லோகலப்பட்டு கிடக்கின்றதாம் மகிழ்ச்சியில்.
வெளியான இரண்டு மொழிப் படங்களுமே குட்டிப் பெண்ணான லட்சுமி மேனனை ஏமாற்றாமல் நல்ல ரிசல்டைக் கொடுத்து அவரை திக்கு முக்காடச் செய்துள்ளனவாம்.

வருத்தம் கொடுத்த படம்:
லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான "நான் சிகப்பு மனிதன்" எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு வெற்றியைத் தரவில்லை. இதில் கொஞ்சம் அப்செட்டாகத்தான் இருந்தார் லட்சுமி.

வரவேற்பை பெற்ற மஞ்சப்பை:
ஆனால், அதற்கு அடுத்ததாக விமலுடன் அவர் நடித்த "மஞ்சப்பை" திரைப்படம் அமிதாப்பின் நடிப்பில் இந்தியில் ரீமேக் ஆகும் அளவிற்கு பலத்த வரவேற்பைப் பெற்றது.

வசூல் மழையில் “ஜிகர்தண்டா”:
மஞ்சப்பை படத்தைத் தொடர்ந்து லட்சுமி மேனன் நடித்த திரைப்படம் "ஜிகர்தண்டா". கடந்த ஆகஸ்டு 1 ஆம் தேதி அன்று வெளியான இப்படம் முதல் மூன்று நாட்களிலேயே ரூபாய் 7 கோடி வரை கல்லா கட்டி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கின்றது.

மலையாளத்தில் ”அவதாரம்”:
அதே நாளில் மலையாளத்தில் திலீப்புடன், லட்சுமி மேனன் நடித்து வெளியான படம்தான் "அவதாரம்". இப்படத்தில் மணிமேகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார் லட்சுமி மேனன்.

தாய் மண்ணில் திறமை:
என்னதான் தமிழ்நாட்டில் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெற்றாலும், தன்னுடைய தாய் மண்ணில் இருந்து ஒரு ஹிட் கூட கொடுக்க முடியாமல் வருத்தத்தில் இருந்து வந்தார்.

ரசிகர்களுக்கும் “டபுள் டிரீட்”:
இந்நிலையில் அவதாரம் படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள காரணத்தினால் டபுள் சந்தோஷத்தில் இருக்கின்றாராம் லட்சுமி மேனன். ரசிகர்களும் டபுள் டிரீட் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











