கொம்பன் படத்தில் கார்த்தியுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்
கொம்பன் படத்தில் முதல் முறையாக கார்த்தியுடன் ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன்.
'பிரியாணி' படத்தை அடுத்து கார்த்தி, 'மெட்ராஸ்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். முன்பு காளி என்ற பெயரில் எடுக்கப்பட்ட படமே இந்த மெட்ராஸ்.
'அட்டகத்தி' ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரினா என்ற புதுமுகம் நடிக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. இப்போது டப்பிங் மற்றும் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடக்கின்றன.

கொம்பன்
இதையடுத்து கார்த்தி இன்னொரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘கொம்பன்' என்று தலைப்பிட்டுள்ளனர். கொம்பன் என்பது லட்சுமி மேனன் நடித்த கும்கியில் வரும் ஒரு யானைக்கு வைக்கப்பட்ட பெயர்.

குட்டிப் புலி முத்தையா
இதில், கார்த்தி ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். ‘குட்டிப்புலி' படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் இரண்டாவது படம் இது. ஸ்டூடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.

வெற்றி நாயகி
கார்த்தியுடன் லட்சுமி மேனன் ஜோடி சேருவது இதுதான் முதல்முறை. இதுவரை தமிழில் லட்சுமி மேனன் நடித்த அனைத்துப் படங்களுமே வணிக ரீதியிலான வெற்றிப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நிலையில்
இன்றைய தேதிக்கு லட்சுமி மேனன்தான் தமிழ் சினிமாவில் முதல் நிலை நாயகியாக உள்ளார். அவர் கைவசம் ஐந்து புதிய படங்கள் உள்ளன. ராசியான நடிகை என்ற பெயர் இருப்பதால், ஏராளமான வாய்ப்புகள் வந்தாலும், அவர் ஒருசிலவற்றை மட்டுமே ஒப்புக் கொள்கிறார்.


Click it and Unblock the Notifications











